Home /News /automobile /

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..

டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி கார்.. லோ பட்ஜெட்டில் ஒரு மினி ஹாரியராக களமிறங்குகிறது..

tata punch

tata punch

புதிய பஞ்ச் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் தோற்றத்தின் பெரும் பங்கை தனக்குள் கொண்டுள்ளது. முகப்பு விளக்குகள் மற்றும் பகல்நேர பல்புகள் அனைத்தும் அப்படியே அச்சு அசலாக டாடா ஹாரியர் போன்றே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வாகன விற்பனையில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீக காலமாக தனது லைன் அப்பில் உள்ள வாகனங்களை மெருகேற்றி வருகிறது. அசத்தலான ஸ்டைல், ஃபெர்பார்மன்ஸ் என வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்றன டாடா கார்கள்.

இந்நிலையில் டாடா பஞ்ச் என்ற புதிய மைக்ரோ எஸ்யூவி காரை இந்த தீபாவளியில் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் டீசர் மூலமாக வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். மினி ஹாரியர் போல இதன் தோற்ற வடிவமைப்பு உள்ளதால் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியுள்ளது. டாடா லைன் அப்பில் நெக்ஸானுக்கு அடுத்ததாக பஞ்ச் நிலைநிறுத்தப்படும்.

இம்பேக்ட் 2.0 டிசைன் லேங்குவேஜ் கீழ் இந்த புதிய பஞ்ச் கார் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் டாடாவின் புதிய ALFA-ARC ஆர்கிடெக்சரில் வெளிவரும் முதல் எஸ்.யூ.வி ஆகவும் பஞ்ச் இருக்கும்.

புதிய பஞ்ச் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் தோற்றத்தின் பெரும் பங்கை தனக்குள் கொண்டுள்ளது. முகப்பு விளக்குகள் மற்றும் பகல்நேர பல்புகள் அனைத்தும் அப்படியே அச்சு அசலாக டாடா ஹாரியர் போன்றே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் என்னற்ற அம்சங்கள் இடம்பெறும் எனவும், அதில் பல செக்மெண்ட்டில் முதல் முறையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அத்துடன் இது பாதுகாப்பான காராகவும் வெளிவரும் என டாடா தெரிவித்திருக்கிறது.

Also Read: கணவர் ₹500 தராததால் மனைவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல்!

இக்காரில் பெரிய டச் ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், மல்டி ஃபன்க்‌ஷனல் ஸ்டீரிங் வீல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோ ஃபோல்டிங் ஓவிஆர்எம், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் என்னற்ற அம்சங்களும், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் ஈபிடி தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறும்.

tata punch


இக்காரில் 3 சிலிண்டர்களுடன் கூடிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும். இது அதிகபட்சமாக 113Nm டார்க் திறனையும், 86 ps பவரையும் வழங்கக்கூடியது. இதைவிட கூடுதலான பவரை வெளிப்படுத்தக் கூடிய டர்போ சார்ஜூடு எஞ்சின் ஒன்றும் இதில் இடம்பெறும்.

Also Read:  வட கொரிய அதிபர் கிம் மாதிரி ஹேர் கட் பன்னுங்க: சலூன் கடைக்காரர் மெர்சல்!

இக்கார் அறிமுகமாகும் போது மாருதி இக்னிஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும், விலை மட்டும் போட்டிபோடும் அளவுக்கு அமைந்து விட்டால் நிச்சயம் டாடா பஞ்ச் பிற மாடல்களுக்கு சவால்மிக்கதாக விளங்கும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Automobile, Car, TATA, Tata motors

அடுத்த செய்தி