Home /News /automobile /

இந்தியாவில் Tata Punch SUV-யின் விலை ரூ.15,000 வரை உயர்ந்தது!

இந்தியாவில் Tata Punch SUV-யின் விலை ரூ.15,000 வரை உயர்ந்தது!

மாருதி சுசூகி கார்

மாருதி சுசூகி கார்

Tata Punch SUV Price Increased : தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுசூகி கார்களின் விலைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.6%-ஆகவும் மற்றும் செப்டம்பரில் 1.9% - ஆகவும் உயர்த்தியது.

இந்தியாவில் உள்ள மற்ற வாகன உற்பத்தியாளர்களைப் போலவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் பயணிகள் வாகனங்களின் விலை உயர்வை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அதன் சமீபத்திய SUV Punch வாகனத்தின் விலையை ரூ.15,000 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, வாகனத்தின் வேரியண்ட் மற்றும் மாடலைப் பொறுத்து சராசரியாக 0.9 சதவிகித உயர்வைக் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

அதே நேரத்தில், டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குறிப்பிட்ட வாகனங்கள் விலையை ரூ.10,000 வரை குறைத்துள்ளது. வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரித்ததால் வாகன உற்பத்திக்காக நிறுவனம் தனது அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியை இதற்காக முதலீடு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் செங்குத்தான உயர்வு காரணமாகவே இந்த குறைந்தபட்ச விலை உயர்வினை கொண்டு வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் உள்ள டாடா மோட்டார்ஸின் கார் வரம்பில் நம்பிக்கையை நிலைநிறுத்திய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விலைப் பாதுகாப்பை வழங்க உள்நாட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜனவரி 18, 2022 அன்று அல்லது அதற்கு முன் முன்பதிவு செய்யப்பட்ட டாடா கார்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என நிறுவனம் தெரிவித்துள்ளது.



உதிரி பாகங்களின் இறக்குமதி செலவுகள் அதிகரித்து வருவதால், வாகன நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம், டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகனங்களின் விலையை அதிகரித்தது. Renault, Volkswagen, Kia Motors, Audi போன்ற பிற உற்பத்தியாளர்கள் பல காரணங்களால் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளனர். உண்மையில், நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா (எம்எஸ்ஐ) சமீபத்தில் அதன் மாடல்களின் விலைகளை 4.3 சதவீதம் வரை உயர்த்தியது.



 

தங்களது உள்ளீட்டு செலவுகளுக்கான உயர்வின் தாக்கத்தை ஓரளவு ஈடுகட்ட இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக நிறுவனம் அதன் மாடல்கள் முழுவதும் 0.1 சதவீதம் முதல் 4.3 சதவீதம் வரை விலைகளை உயர்த்தியது. மாருதி நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை விலைகளை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுசூகி கார்களின் விலைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 1.6%-ஆகவும் மற்றும் செப்டம்பரில் 1.9% - ஆகவும் உயர்த்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், நிறுவனம் அதன் பிரபலமான மாடல் ஸ்விஃப்ட் மற்றும் அனைத்து சிஎன்ஜி பொருத்தப்பட்ட அனைத்து மாடல்களின் விலையையும் ரூ.15,000 வரை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தற்போது 4வது முறையாக விலையை உயர்த்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: TATA

அடுத்த செய்தி