• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 4 வேரியன்ட்களுடன் அறிமுகமானது டாடா பன்ச் – ஆரம்ப விலை 5.49 லட்சம் மட்டுமே!

4 வேரியன்ட்களுடன் அறிமுகமானது டாடா பன்ச் – ஆரம்ப விலை 5.49 லட்சம் மட்டுமே!

டாடா பன்ச்

டாடா பன்ச்

டாடா பன்ச் எஸ்யூவி காரின் முன்புற தோற்றத்தைப் பொறுத்தவரை, இதன் பிரீமியம் மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பட்ஜெட் எஸ்யூவி வாகனத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக செய்தி சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. டாடா மோட்டர்ஸ் பன்ச் எஸ்யூவி காருக்கு ஏற்கனவே முன்பதிவு தொடங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது நான்கு வேரியன்ட்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக விலையாக எஸ்யூவி இன் விலை ₹5.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம் விலை) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில், நடுத்தர வர்கத்தினரும் சொகுசு எஸ்யூவி காரை வாங்கி மகிழும் வகையில் டாடா மோட்டார்ஸ் பன்ச் எஸ்யூவியை உருவாக்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய இந்த காரின் மூலம், வாகனச் சந்தையின் மதிப்பு கணிசமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பாக்ட் எஸ்யூவி டிசைன் :

இந்த எஸ்யூவி, ஆல்ட்ரோஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதன் படி, இந்த கார் ALFA பிளாட்ஃபாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதும், 90 டிகிரி கோணத்தில் திறக்கப்படும் கதவுகளைக் கொண்டிருப்பதும் இதன் சிறப்பம்சங்களாகும். டாடா பன்ச் காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் சக்கரங்கள் உள்ளன.

காண்பவர்களை ஈர்க்கும்படி, உறுதியான தோற்றத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது இந்த எஸ்யூவி. மைக்ரோ எஸ்யூவி என்று கூறும்படி இருந்தாலும், நேர்த்தியான தோற்றத்தை கொண்டுள்ளது. அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், Apple CarPlay மற்றும் Android Auto உடன் வரும் 7 இன்ச் மிதக்கும் டச்ஸ்க்ரீன் இன்போஃடைன்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், நான்கு ஸ்பீக்கர்கள், டூயல் டோன் கேபின், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், iRA இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி ஆகிய அம்சங்களுடன், தாராளமான இட வசதியையும் பன்ச் எஸ்யூ கேபினை அழகாக காட்சியளிக்க வைத்துள்ளது.

டாடா பன்ச் எஸ்யூவி காரின் முன்புற தோற்றத்தைப் பொறுத்தவரை, இதன் பிரீமியம் மாடல்களான ஹாரியர் மற்றும் சஃபாரி காரின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் எஸ்யூவி டைமென்ஷன்கள்

புதிதாக அறிமுகம் ஆகியுள்ள டாடா பன்ச் எஸ்யூவி கார் 3,840 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம், 1,635 மிமீ உயரம் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த கார் 187 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 366 லிட்டர் பூட்கெப்பாசிட்டி கொண்டுள்ளது.

Also read... பி.எம்.டபள்யூ C 400 GT ஸ்கூட்டர் டெலிவரி இந்தியாவில் தொடங்கியது - தலை சுற்றவைக்கும் விலை!

என்ஜின் மற்றும் பிற அம்சங்கள் :

டாடா பன்ச் என்ஜினைப் பொறுத்த வரையில், தற்போது அதிகமாக விற்பனையாகி கொண்டிருக்கும் அல்ட்ரோஸ் மற்றும் டிகோர் ஆகிய கார்களில் உள்ள என்ஜின் இடம்பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது மற்றும் இது 86hp பவர், 113Nm டார்க் வழங்குகிறது.

பன்ச் எஸ்யூவி 6.5 வினாடிகளில், 0-60 கிமீ வேகத்தை எட்டும் என்றும் 16.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும் என்று டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாடா பன்ச் எஸ்யூவி காரின் வேரியன்ட்கள் :

டாடா பன்ச் காரின் அடிப்படை வேரியன்ட் Pure ஆகும். Adventure, Accomplished மற்றும் Creative என கூடுதலாக மூன்று வேரியண்டுகளில் வருகிறது. ஒவ்வொரு வேரியன்ட்டிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்யூவி, டொர்னாடோ ப்ளூ, கேலிப்ஸோ ரெட், மீட்டியர் ப்ரான்ஸ், அடாமிக் ஆரஞ்ச், டிராப்பிக்கல் மிஸ்ட், டேடானா கிரே மற்றும் ஆர்க்கஸ் வைட் என்று பல வண்ணங்களில் வருகிறது.

இந்த எஸ்யூவி, மாருதி சுசுகி இக்னிஸ், மஹிந்திரா KUV100, நிஸான் மாக்நைட் மற்றும் ரெனால்ட் கைகெர் ஆகிய வாகனங்களுடன் போட்டியாக இந்திய சந்தையில் களம் இறங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: