Home /News /automobile /

மிக குறைந்த விலையில், மிகுந்த பாதுகாப்பான காராக அறிமுகமானது Tata Punch..

மிக குறைந்த விலையில், மிகுந்த பாதுகாப்பான காராக அறிமுகமானது Tata Punch..

 மிக குறைந்த விலையில், மிகுந்த பாதுகாப்பான காராக அறிமுகமானது Tata Punch..

மிக குறைந்த விலையில், மிகுந்த பாதுகாப்பான காராக அறிமுகமானது Tata Punch..

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021ம் ஆண்டின் புதிய ரக மைக்ரோ எஸ்யூவி காராக Tata Punch-ஐ அக்.18ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.

    டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே, நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட எஸ்யூவி ரக கார்கள் விற்பனையாகி வரும் நிலையில், இந்த ஆண்டின் புதிய அறிமுகமாக மைக்ரோ எஸ்யூவியான டாடா பஞ்ச்-ஐ அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மைக்ரோ எஸ்யூவி காருக்கான முன்பதிவு ஏற்கனவே இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

    டாடா நெக்ஸானுக்கு முந்தைய செக்மண்டாக, டாடா பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளனர். மற்ற நிறுவனங்களின் மைக்ரோ எஸ்யூவிகளை ஓப்பிட்டு பார்க்கும் போது, டாடா பஞ்ச் மிக குறைந்த விலையாக காணப்படுகிறது. டாடா நிறுவனம் டாடா பஞ்ச்-ன் அறிமுக விலையாக ரூ.5.6 லட்சம் என நிர்ணயத்துள்ளது.



    ரெனால்ட் கிகர் மற்றும் நிசான் மேக்னைட்டுக்கு போட்டியாக டாடா பஞ்ச்-ன் விலை உள்ளது. இந்தியாவில் இந்த விலைக்கு குறைவாக மைக்ரோ எஸ்யூவி ரக கார் என்றால், மாருதி சுஸுகியின் எஸ்-பிரஸ்ஸோ மற்றும் மஹிந்திரா KUV100 NXT ஆகிய இரண்டும் எண்ட்ரி நிலை மைக்ரோ எஸ்யூவியாக பஞ்ச்க்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

    அக்.4ம் தேதி டாடா பஞ்ச்-க்கான முன்பதிவு தொடங்கியது. குறைந்த முன்பனமாக ரூ.21,000 செலுத்தி டாடா பஞ்ச்-ஐ முன்பதிவு செய்துகொள்ளலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த பஞ்ச் கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எவ்வளவு கார்கள் முன்பதிவு ஆகியுள்ளன என்ற விவரத்தை நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது.

    சோதனை ஓட்டத்தில் டாடா பஞ்ச் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தருவதாக கூறப்படுகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக்-மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) வகைகளில் கிடைக்கிறது. இந்த காரின் டாப்-எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ.8.49 லட்சமாக உள்ளது. ஏஎம்டி வேரியன்ட்டின் விலை மேனுவல் வேரியண்ட்டை விட ரூ.60,000 அதிகமாகும்.

    ரூ. 6.5 லட்சத்திற்கு கீழ் உள்ள மற்ற மாடல் கார்களைப் போலவே, பஞ்ச் இப்போதைக்கு பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வருகிறது. இந்த மைக்ரோ எஸ்யூவி 3-சிலிண்டர் 1199 சிசி எஞ்சின் மூலம் இயங்குகிறது, இது அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரை வழங்குகிறது. ஏழு வண்ணங்களில் கிடைக்கும் இந்த எஸ்யுவி, நெக்ஸானில் காணப்படும் அதே 1.2 லிட்டர் இயற்கையான ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்குகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TATA, Tata motors, Tata safari

    அடுத்த செய்தி