முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம்.... சேஃப்டி ரேட்டிங்கில் 5 ஸ்டாரை அள்ளிய ‘டாடா பஞ்ச்’

பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம்.... சேஃப்டி ரேட்டிங்கில் 5 ஸ்டாரை அள்ளிய ‘டாடா பஞ்ச்’

டாடா பஞ்ச்

டாடா பஞ்ச்

tata punch | பெரும்பாலனோரின் விருப்பத் தேர்வாக உள்ள மைக்ரோ எஸ்யுவி காரான டாடாவின் பஞ்ச், இப்போது பாதுகாப்பிற்கான தர சோதனையில் 5ஸ்டார்களை பெற்றுள்ளது. இதனால் டாடா பஞ்ச், விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

இப்போதெல்லாம் கார் வாங்க நினைக்கும் சாமானியர்கள் கூட தாங்கள் வாங்க விரும்பும் காரின் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன என்பதை அதிக கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். விரைவுச் சாலைகள் ஆன பிறகு அதிக வேகத்தில் அதிகரிக்கும் சாலை விபத்துக்களால் மக்கள் இப்படி முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளில் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள்.

அநத வகையில் மிக குறைந்த விலையில் எஸ்யுவி காரைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் டாடா பஞ்ச் கார் இப்போது பாதுகாப்பிற்கான ரேட்டிங்கில் 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தியுள்ளது. டாடாவின் பெரிய கார்களான நெக்சான் மற்றும் ஹேரியர் கார்களின் மினியேச்சர் என்று கூட டாடா பஞ்ச்சை சொல்லலாம். சாலைகளில் மட்டுமல்ல ஆஃப்ரோடுகளிலும் அசராமல் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது டாடா பஞ்ச்.

விலையும் 7 முதல் 8 லட்சம் ரூபாய் தான். அதோடு இப்போது பாதுகாப்பிற்கும் உறுதி கிடைத்துள்ளது. அப்புறம் என்ன இனி சந்தையில் பஞ்ச்-ன் கொடி உயரப் பறக்கப் போகிறது. இனி டாடா பஞ்ச்-ன் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

டாடா பஞ்ச் – கார் மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான கட்டமைப்பு என்கிற அம்சத்தோடு 15க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்தக் காரில் உள்ளன.

ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தோடு, சென்ட்ரல் லாக் சிஸ்டம் உள்ளது இந்தக் காரில். குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல சில்ட்ரன் லாக்குடன் 2 ஏர் பேக்குகள் உள்ளன. இரவு பகல் என எல்லா நேரங்களிலும் தெளிவாக பார்க்கும் வகையில் ரியர்வியூ மிர்ரர், கதவுகளில் இருக்கும் ரியர்வியூ மிர்ரர், பின் இருக்கையில் சீட்பெல்ட், ட்ராக்சன் கண்ட்ரோல், இருக்கை உயரத்தை அட்ஜெட் செய்து கொள்ளும் வசதி, கிராஸ் சென்சார், எஞ்சின் பழுது எச்சரிக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், இபிடிஏ எனப்படும் பாதுகாப்பான பிரேக்கிங் சிஸ்டம், பின்புற கேமரா என பாதுகாப்பு அம்சங்கள் டாடா பஞ்ச் காரில் உள்ளன.

மேலும், 1,199 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோ கியர் என இரண்டு வேரியண்டிலும் இந்தக் கார் கிடைக்கிறது. அதோடு இந்த பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கிறது.

ஒரு ஃபுல் சார்ஜ்-க்கு 320 கிமீ மைலேஜ்..! அசத்தும் ஆல் எலெக்ட்ரிக் E-C3 ..! - ஆன்லைன் பர்ச்சேஸ் வசதியும் உண்டு!

அதோடு டச் ஸ்கிரீன், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், க்ருஸ் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீயரிங்கிலேயே அமைந்துள்ள கண்ட்ரோல் சுவிட்சுகள், ட்ரைவ் மோட்கள், iRA டெக்னாலஜி என அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ள டாடா பஞ்ச்-ன் விலையோ வெறும் ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வரை தான். இப்போது பாதுகாப்பு ரேட்டிங்கிலும் முன்னனியை பிடித்துள்ளது.

First published:

Tags: Tata motors