Home /News /automobile /

அறிமுகமான 12 நாட்களில் 10,000 கார்கள் விற்பனை - டாடா பன்ச் சாதனை!

அறிமுகமான 12 நாட்களில் 10,000 கார்கள் விற்பனை - டாடா பன்ச் சாதனை!

டாடா பன்ச் இந்தியாவில் 2021, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அறிமுகமானது.

டாடா பன்ச் இந்தியாவில் 2021, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அறிமுகமானது.

டாடா பன்ச் இந்தியாவில் 2021, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அறிமுகமானது.

இந்தியாவில் அறிமுகமான 12 நாட்களிலேயே, இரண்டாவது அதிகமாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது டாடா பன்ச். டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் இந்த காம்பாக்ட்டான எஸ்யூவியின் விலை 5.5 லட்ச ரூபாய் முதல் 9 லட்ச ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்திய சந்தையில் புத்தம் புதிய சப்-காம்பாக்ட் SUV மாடலான டாடா பன்ச்சை சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் சிறிய ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வாகனத்தின் வரிசையில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. டாடா பன்ச் இந்தியாவில் 2021, அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி அறிமுகமானது. டெலிவரிக்கான முன்பதிவு உடனேயே தொடங்கியது. பட்ஜெட் விலையில், நடுத்தர வர்கத்தினரும் சொகுசு எஸ்யூவி காரை வாங்கி மகிழும் வகையில் டாடா மோட்டார்ஸ் பன்ச் எஸ்யூவியை உருவாக்கியுள்ளது.

இந்திய நிறுவனமான டாடாவால் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட இந்த காம்பக்ட் எஸ்யுவி உடனேயே 8,453 யூனிட்கள் விற்பனையானது. தற்போது மொத்த யூனிட்களின் விற்பனை 10,096 ஆகும். அறிமுகமான சில நாட்களிலேயே, பன்ச் இந்தியாவின் சிறந்த விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read:  காதல் திருமணம் செய்தவரின் தந்தை, சகோதரர் சட்டவிரோதமாக கைது - போலீசார் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை!

இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம், மூன்று சிளிண்டர்களுடன், இயக்கப்படும் என்றும் மேலும் இது 85 hp பவரை 113 என்எம் பீக் டார்க் உடன் உற்பத்தி செய்கிறது என்றும் கூறப்படுகிறது. பிற அம்சங்களைப் பொறுத்தவரை, Apple CarPlay மற்றும் Android Auto உடன் வரும் 7 இன்ச் மிதக்கும் டச்ஸ்க்ரீன் இன்போஃடைன்மென்ட் சிஸ்டம், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், நான்கு ஸ்பீக்கர்கள், டூயல் டோன் கேபின், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், iRA இணைக்கப்பட்ட கார் டெக்னாலஜி ஆகிய அம்சங்களுடன், தாராளமான இட வசதியோடு பன்ச் எஸ்யூ காட்சியளிக்கிறது.

இந்த எஸ்யுவியின் எக்ஸ்-ஷோரூம் விலையாக, ஐந்து லட்ச ரூபாய் ஆரம்ப   விலை எனவும், அதிகபட்ச விலையாக ஒன்பது லட்ச ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலையில் இருக்கும் வேறுபாட்டிற்கான காரணம்,

Also read:  மொபைலில் சத்தமாக பாட்டு கேட்கும் பயணிகளை பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் - உயர்நீதிமன்றம் அதிரடி

இதன் நான்கு வேரியன்ட்கள். இந்த சொகுசு காரின் அடிப்படை அடிப்படை வேரியன்ட் Pure. Adventure, Accomplished மற்றும் Creative என கூடுதலாக மூன்று வேரியன்ட்டுகளில் வருகிறது. ஒவ்வொரு வேரியன்ட்டிற்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி, டொர்னாடோ ப்ளூ, கேலிப்ஸோ ரெட், மீட்டியர் ப்ரான்ஸ், அடாமிக் ஆரஞ்ச், டிராப்பிக்கல் மிஸ்ட், டேடானா கிரே மற்றும் ஆர்க்கஸ் வைட் என்று பல வண்ணங்களில் விற்பனையாகி வருகிறது.

ஏற்கனவே சந்தையில் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் மாருதி சுசுகி இக்னிஸ், மஹிந்திரா KUV100, நிஸான் மாக்நைட் மற்றும் ரெனால்ட் கைகெர் ஆகிய நான்கு வாகனங்களுக்கு இந்த மினி எஸ்யூவி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, அறிமுகம் செய்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட யூனிட்டுகள் விற்பனையாகி மற்ற போட்டி வாகனங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
Published by:Arun
First published:

Tags: Automobile, TATA, Tata motors

அடுத்த செய்தி