2020-க்குள் 500 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கிறது டாடா

கடந்த ஆண்டில் மட்டும் இந்திய சாலைகளில் களமிறங்கிய புதிய வாகனங்களின் எண்ணிக்கை 25 மில்லியன்.

Web Desk | news18
Updated: August 30, 2019, 6:53 PM IST
2020-க்குள் 500 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்கிறது டாடா
டாடா பவர்
Web Desk | news18
Updated: August 30, 2019, 6:53 PM IST
வருகிற 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 500 எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாக டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த வாகனங்களுக்கு வரிச்சலுகை, ஜிஎஸ்டி குறைப்பு எனப் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பெருகி வரும்போது அதற்கு ஏற்றாற் போன்ற கட்டமைப்புகளும் தேவைப்படும். இதனால் முதல் ஆளாக சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து டாடா குழுமத் தலைவர் ரமேஷ் சுப்பிரமணியம் கூறுகையில், “வாகனப் போக்குவரத்து  பெரும் மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது. ஒரு ஆய்வின் அடிப்படையில் சர்வதேச எலெக்ட்ரிக் வாகன மாற்றம் என்பது 2025-ம் ஆண்டில் 11 மில்லியனாகவும் 2030-ம் ஆண்டில் 30 மில்லியன் ஆகவும் வளர்ச்சி அடைந்திருக்கும்.


ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1.1 மில்லியன் ஆகும். பல காரணங்களால், இத்துறையில் இந்தியா இன்னும் வளர வேண்டிய பட்டியலில்தான் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்திய சாலைகளில் களமிறங்கிய புதிய வாகனங்களின் எண்ணிக்கை 25 மில்லியன். ஆனால், இதில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்பது வெறும் 0.3 சதவிகிதம் மட்டுமே.

இப்புதிய மாற்றத்துக்கு ஏற்ப டாடா குழுமம் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். தற்போது அதற்கான இடத்தேர்வு நடந்து வருகிறது. முதற்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், இந்தூர், விஜயவாடா, ஓசூர் ஆகிய நகரங்களில் இடத்தேர்வு நடைபெற்று வருகிறது” என்றார்.

ஹார்லி டேவிட்சனின் முதல் எலெக்ட்ரிக் பைக்... இந்தியப் பதிப்பின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

Loading...

மேலும் பார்க்க: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...