• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கொரோனா காலத்திலும் நெக்சான் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் விருப்பும் எலெக்ட்ரிக் கார்!

கொரோனா காலத்திலும் நெக்சான் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரிப்பு - வாடிக்கையாளர்கள் விருப்பும் எலெக்ட்ரிக் கார்!

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்

30.2kWH பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு Fast charging ஆப்ஷன் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் டாடா குழுமத்தின் நெக்சான் எலெக்ட்ரிக் கார் விற்பனை அதிகரித்துள்ளது.

டாடா குழுமத்தின் சொந்த தயாரிப்பான நெக்சான் எலெக்ட்ரிக் காரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அப்போது கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் பரவி, இந்தியாவுக்குள்ளும் நுழைந்திருந்தது. படிப்படியாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரங்கு பிறபிக்கப்பட்டது. இதனால், டாடா குழுமத்தின் எலெக்ட்ரிக்  நெக்சான் கார் விற்பனை தொடக்க நிலையிலேயே மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. 

மே மாதத்தில் 78 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில், அந்த எண்ணிக்கை அடுத்தடுத்த மாதங்களில் படிப்படியாக உயர்ந்தது. அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் கார் விற்பனை சூடுபிடித்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 418 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு இறுதியில் 2062 கார்கள் விற்பனையாகி, எலெக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனங்களில் அதிக விற்பனையை செய்த நிறுவனம் என்ற பெருமையை டாடா குழுமம் பெற்றது. 

எனர்ஜி எஃபிசியன்ஸி நிறுவனம் மட்டும் 150 டாடா நெக்சான் கார்களை ஆர்டர் செய்தது. இதற்கு முக்கிய காரணம் மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் விலையைவிட, டாடா குழும நெக்சான் SUV EV கார்களின் விலை குறைவாக இருப்பதாகும். நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலை 13.99 லட்ச ரூபாயில் இருந்து 16.25 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது. தொடக்கத்தில் XZ+ வேரியண்ட் 14.86 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டு, கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகிறது. விலை குறைப்பும் டாடா குழும கார்களின் விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  XZ+ வேரியண்ட் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாத சப்ஸ்கிரிப்சனும் டாடா நிறுவனம் வழங்குகிறது. 

Also read... இந்தியாவில் அறிமுகமானது "BMW 2-Series Gran Coupé M Sport" வாகனம் - ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

அதன்படி, மாதம் 29,500 ரூபாய் செலுத்த வேண்டும். டெல்லி, பெங்களுரு, பூனே, ஹைதராபாத் நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த எலெக்ட்ரிக் காரில், Sun roof, ஃபாலோ மீ ஹோம் (Follw me Home) வசதியுடன் ஆட்டோ ஹெட்லேம்ப்கள், 7 இன்ச் ஹார்மன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 2 ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. 

30.2kWH பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு Fast charging ஆப்ஷன் உள்ளது. CCS2 Charger பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்து விடலாம். பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும் என்பதால், மக்களிடையே எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: