ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

உள்நாட்டிலேயே தயாரான முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி... டாடா நெக்ஸான் முன்பதிவு தொடக்கம்...!

உள்நாட்டிலேயே தயாரான முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி... டாடா நெக்ஸான் முன்பதிவு தொடக்கம்...!

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்

டார்க் வெளியீடு 245 Nm கொண்டதாக இருப்பதால் 100 kmph வேகத்தை 9.9 விநாடிகளில் அடைய முடியும்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  டாடா மோட்டார்ஸ் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆக டாடா நெக்ஸான் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.

  உள்நாட்டிலேயே தயாரான இந்தியாவின் முதல் எஸ்யூவி என்ற பெருமையையும் இந்தக் கார் பெற்றுள்ளது. ஜிப்ட்ரான் தொழில்நுட்பத் திறன் உடன் அதிக வோல்டேஜ் சிஸ்டம், அதிவிரைவு சார்ஜிங் திறன், நீடித்த பேட்டரி திறன், அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் என அசத்துகிறது நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி.

  ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ள இந்தக் காரின் விலை 15 முதல் 17 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கார் மொத்தம் மூன்று ரகங்களில் விற்பனைக்கு வர உள்ளது. XZ+ LUX, XZ+ மற்றும் XM . டீல் ப்ளூ, மூன்லைட் சில்வர், க்ளேசியர் வொய்ட் ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. கூடுதலாக 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கி.மீ வாரண்டியும் கொடுக்கப்படுகிறது.

  உள்கட்டமைப்பைப் பொறுத்த வரையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உடன் 7 இன்ச் ஹர்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப ஸ்போர்ட்டி தோற்றத்துடன் காரின் வடிவமைப்பு உள்ளது.

  129 PS பெர்மனெண்ட் மேக்னட் ஏசி மோட்டார் உடன் அதிக திறன் வாய்ந்த 30.2 kWh கொண்ட லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. டார்க் வெளியீடு 245 Nm கொண்டதாக இருப்பதால் 100 kmph வேகத்தை 9.9 விநாடிகளில் அடைய முடியும்.

  மேலும் பார்க்க: 20-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மாருதி சுசூகி WagonR..!

  Published by:Rahini M
  First published:

  Tags: TATA