Home /News /automobile /

எலெக்ட்ரிக் வாகனம் குறித்த புதிய கான்செப்டை வெளியிடுகிறது டாடா நிறுவனம்

எலெக்ட்ரிக் வாகனம் குறித்த புதிய கான்செப்டை வெளியிடுகிறது டாடா நிறுவனம்

காட்சி படம்

காட்சி படம்

மாபெரும் அளவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
எலெக்ட்ரிக் வாகன பிரிவில் டாடா நிறுவனத்திடம் இருந்து அடுத்து என்ன எதிர்ப்பார்ப்புகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்பது குறித்து டீசர் வீடியோ சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், எஸ்யூவி கார் ஒன்றின் சின்னென்ன டிசைன் பாகங்கள் குறித்து மட்டுமே காண்பிக்கப்பட்டது என்பதால், அது என்ன மாடலாக இருக்கும் என்பதை மிக சரியாக யூகிக்க முடியவில்லை.

ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, அந்த கார் என்பது லாங்க் ரேஞ்ச் நெக்ஸான் ஈவி அல்லது சியாரா ஈவி ஆகியற்றில் ஒன்றாக இருக்கப் போவதில்லை என தெரியவந்துள்ளது. இந்த இரண்டு மாடல்களையும் சேர்த்த புது கலவையாக அது இருக்கக் கூடும் என்று தெரிகிறது. குறிப்பாக, டாடா நிறுவனம் வெளியிட்ட டீசர் வீடியோவில், ‘டிஸ்கவர் டிஃபெரெண்ட்’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய காரின் அம்சங்கள் என்னவாக இருக்கும்?

எலெக்ட்ரிக் வாகன சீரியஸில் அடுத்த வரவாக டாடா வெளியிட உள்ள புதிய காரின் வண்ணம் ப்ளூ கலராக இருக்கும் என கருதப்படுகிறது. அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் இந்த கலரைத் தான் டாடா நிறுவனம் பயன்படுத்துகிறது. இதனுடன் ஒரு எல்ஈடி லைட் பார் இடம்பெறுகிறது. அது பிராண்ட் கிரில்லே முதல் ஹூட் பக்கங்களில் சென்று ஓஆர்விஎம்எஸ் பகுதியில் நிறைவு பெறுகிறது.

ஹாரியர், சஃபாரி மற்றும் பஞ்ச் ஆகிய வாகனங்களில் இடம் பெற்றிருப்பதைப் போலவே இந்த எஸ்யூவி காரில் லோயர் பம்பர் பகுதிக்கு கீழ் ஹெட்லைட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காரின் அலாய் டிசைன்களையும் டீசர் வீடியோவில் பார்க்க முடிந்தது. இதில், ஏரோடைனமிக்கலி வகையில் டிசைன் செய்யப்பட்ட கிரே கலர் அலாய்கள் பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

காரின் முன்பகுதியில் ஈவி பேட்ஜ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லோகோ ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்த திட்டம் :

இந்த மாதம் 20 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாபெரும் அளவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், புதிய எலெக்ட்ரிக் வாகன அறிமுகம் மற்றும் விற்பனை இலக்குகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

also read : இந்தியாவில் தீப்பிடிக்காத Fireproof பேட்டரிகளை அறிமுகப்படுத்த தயார் - கோமகி நிறுவனம்

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பிரிவில் பல்வேறு இலக்குகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. குறிப்பாக லாங் ரேஞ்ச் நெக்ஸான் ஈவி, முழுமையான எலெக்ட்ரிக் வெர்சனை கொண்ட அல்ட்ராஸ் மற்றும் டியாகோ ஈவி போன்றவற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நெக்ஸான் ஈவி இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

நெக்ஸான் ஈவி அம்சங்கள் மற்றும் விலை :

நெக்ஸான் ஈவி 6.6 கிலோவாட் ஏசி சார்ஜர் கொண்டதாக இருக்கும். இதில், ஏற்கனவே உள்ள 30.2 கிலோ வாட் பேட்டரியை காட்டிலும் நீண்ட பவர் பேக் அப் கொண்ட பயன்படுத்தப்பட உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

லாங்க் ரேஞ்ச் நெக்ஸான் ஈவி வாகனமானது 4 வேரியண்டுகளில் வருகிறது. அந்த வேரியண்டுகளுக்கு XZ+, XZ+ Dark Edition, LUX மற்றும் XZ+ LUX என பெயரிடப்பட்டுள்ளன. அவற்றின் விலை முறையே ரூ.16.78 லட்சம், ரூ.17.13 லட்சம், ரூ.17.82 லட்சம் மற்றும் ரூ.18.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Electric Cars, Tata motors

அடுத்த செய்தி