டாடா மோட்டார்ஸின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி... Gravitas!
2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- News18
- Last Updated: November 27, 2019, 6:54 PM IST
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அடுத்த வெளியீடான 7 சீட்டர் எஸ்யூவி காரின் பெயர் Gravitas என அறிவித்துள்ளது.
பஸ்சார்டு, கசினி எனப் பல கட்ட பெயர் யோசனைகளுக்குப் பின் டாடா மோடார்ஸ் தனது அடுத்த வெளியீட்டுக்கு Gravitas எனப் பெயரிட்டுள்ளது. டாடா Gravitas வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
காரின் தோற்றம் மற்றும் இதர தகவல்கள் வருகிற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹேரியர் காருக்குப் பின் டாடா OMEGA கட்டுமானத்தின் அடிப்படையில் வடிவமைத்துள்ள காராக டாடா Gravitas உள்ளது. OMEGA கட்டுமானம் என்பது லேண்ட் ரோவரின் லெஜெண்டரி D8 ப்ளாட்ஃபார்ம் அடிப்படையைக் கொண்டதாக உள்ளது. டாடா ஹேரியர் அடிப்படையில் தான் டாடா Gravitas இருக்கும் என்றாலும் சொகுசிலும் திறனிலும் மிகவும் மேம்பட்டதாக இருக்கும். 2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வருகிற ஏப்ரல் 2020 முதல் அமலாக உள்ள மாசுக்கட்டுப்பாடு கொள்கைக்கு ஏற்ப BS-VI அடிப்படையிலேயே இப்புதிய டாடா க்ராவிடாஸ் வெளியாகிறது.
மேலும் பார்க்க: விலைகுறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த எஸ்யூவி- ரேஞ்ச் ரோவர் வெலார்..!
பஸ்சார்டு, கசினி எனப் பல கட்ட பெயர் யோசனைகளுக்குப் பின் டாடா மோடார்ஸ் தனது அடுத்த வெளியீட்டுக்கு Gravitas எனப் பெயரிட்டுள்ளது. டாடா Gravitas வருகிற 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
காரின் தோற்றம் மற்றும் இதர தகவல்கள் வருகிற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா ஹேரியர் காருக்குப் பின் டாடா OMEGA கட்டுமானத்தின் அடிப்படையில் வடிவமைத்துள்ள காராக டாடா Gravitas உள்ளது. OMEGA கட்டுமானம் என்பது லேண்ட் ரோவரின் லெஜெண்டரி D8 ப்ளாட்ஃபார்ம் அடிப்படையைக் கொண்டதாக உள்ளது.
மேலும் பார்க்க: விலைகுறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த எஸ்யூவி- ரேஞ்ச் ரோவர் வெலார்..!