முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஒரே ஆர்டரில் 10 ஆயிரம் யூனிட்கள்... டாடா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்!

ஒரே ஆர்டரில் 10 ஆயிரம் யூனிட்கள்... டாடா நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்!

Tata Motors

Tata Motors

TATA Motors | ப்ளூஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டியில் இருந்து 10,000 XPRES-T EV யூனிட்களை வழங்குவதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

  • Last Updated :

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது தனி பயனாளிகளைக் கடந்து பெரு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மிகப்பெரிய வாடகை கார் நிறுவனமான ப்ளூஸ்மார்ட் எலக்ட்ரிக் மொபிலிட்டியிடம் இருந்து 10 ஆயிரம் XPRES-T EV யூனிட்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டர் கிடைத்துள்ளது. இது தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் ஆர்டர் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் ஆகும்.

ப்ளூஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் ஏற்கனவே 3500 Xpres-T கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ள நிலையில், தற்போது 10000 கார்களை ஆர்டர் செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் விரைவில் கார்களை டெலிவரி செய்யத் துவங்க உள்ளது.

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில் "டாடா மோட்டார்ஸ் இயக்கத்தின் விரைவான மின்மயமாக்கலை நோக்கி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மேலும் புகழ்பெற்ற ஆன்லைன் வாடகை கார் நிறுவனம் எங்களுடைய பசுமை அலையில் இணைவதைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஓலா, உபர் நிறுவனத்தைப் போலே எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே வைத்து ஆன்லைன் டாக்சி சேவை அளித்து வரும் நிறுவனம் ப்ளூஸ்மார்ட் எலெக்ட்ரிக் மொபிலிட்டி, இது குர்கிராம்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.

ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மாசில்லாத 50 மில்லியன் கிலோ மீட்டர்களை கடந்துள்ளது, இதன் மூலமாக 1.6 மில்லியன் பூஜ்ஜிய உமிழ்வு சவாரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய முழு-எலக்ட்ரிக் ரைட் ஹெயிலிங் சேவையிலிருந்து EV சார்ஜிங் சூப்பர் ஹப்களின் மிகப்பெரிய நெட்வொர்க் வரை,இந்தியாவில் ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த EV மொபிலிட்டி சுற்றுச்சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Also Read : இந்தியாவில் 2022ல் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இதோ!

top videos

    ஜூலை 2021 இல், டாடா மோட்டார்ஸ் XPRES பிராண்டை அறிமுகப்படுத்தியது, இது ஃப்ளீட் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக மற்றும் XPRES-T EV இந்த பிராண்டின் கீழ் முதல் வாகனம் ஆகும். XPRES-T மின்சார செடான் 213 கிமீ மற்றும் 165 கிமீ ஆகிய இரண்டு விருப்பங்களுடன் வருகிறது. இதில்  21.5 kWh மற்றும் 16.5 kWh அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் வேகமான சார்ஜிங்கைப் பயன்படுத்தி முறையே 90 நிமிடங்கள் மற்றும் 110 நிமிடங்களில் 0-80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யலாம் அல்லது சாதாரணமாக எந்த 15 A பிளக் பாயிண்டிலும் சார்ஜ் செய்யலாம். இது ஜீரோ டெயில்-பைப் எமிஷன், சிங்கிள் ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் EBD ஆகிய வேரியன்ட்களை கொண்டுள்ளது.

    First published:

    Tags: Automobile, Electric car, Tata motors