இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 10 எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்காக 15 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்ய உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக 2846 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
மேலும் பிப்ரவரி மாத நிலவரப்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மின்சார வாகன விற்பனை வளர்ச்சி 487 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அடுத்த மைல் கல்லை பதிக்க தயாராகி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி பிரிவில் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நெக்ஸான் இவி விற்பனை தற்போது உயர்ந்து வரும் நிலையில், மேலும் புதிதாக 10 புதிய வாகனங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறுகையில், "எதிர்காலத்தைப் பொறுத்த வரையில், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.15,000 கோடியை மின்சார வாகனங்கள் உற்பத்திக்காக முதலீடு செய்ய உள்ளோம். இந்த புதிய 10 வாகனங்களும் பாடி ஸ்டைல், டிரைவிங் ரேஞ்ச், விலை மற்றும் பல்வேறு விதமான விரும்பங்களுடன் வெளியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Also Read : ரூ.85,000 வரை சிறப்பு தள்ளுபடிகள் - TATA Motors-ன் அதிரடி அறிவிப்பு!
இதற்கு முன்னதாக தனியார் முதலீட்டு நிறுவனமான TPG-லிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன உற்பத்திக்காக 1 பில்லியன் டாலர் நிதி திரட்டியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக மதிப்பு 9.1 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவுரங்காபாத் மிஷன் ஃபார் கிரீன் மொபிலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிகத்தின் தலைவர் ஷைலேஷ் சந்திரா, உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு 101 மின் வாகனங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், மின்சார வாகன சந்தையை விரிவுபடுத்த விரைவில் சார்ஜிங் வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நிறுவனம் அதனை மேம்படுத்துவதற்காகவும் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கிட்டதட்ட 400 சார்ஜிங் நிலையங்கள் உள்ளதாகவும், அதனை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Also Read : மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் அதிரடி தள்ளுபடிகள்
மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 400 சார்ஜிங் நிலையங்களில், 15 முதல் 20 வரையிலானவை அவுரங்காபாத்தில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அதனை விரிவாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்திய போது, அதனை முதல் காராக பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 20 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே இருந்ததாகவும், தற்போது வரை 22 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உடன் ஒப்பிட்டால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ள கார்களின் அளவு 1.5 லட்சம் மரங்களை நடுவதற்கு சமம் என்றும் சந்திரா பெருமிதத்துடன் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Tata motors