கார் விலையை ஏற்ற உள்ள டாடா மோட்டார்ஸ்... காரணம் என்ன..?

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாடா மோட்டார்ஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் ஏப்ரல் மாதம் முதல் பயணிகள் வாகனங்கள் விலையை 25,000 ரூபாய் வரை விலை உயர்த்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

  வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம், உள்ளிட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பொருளாதார காரணிகளால் கார் விலையை 25,000 ரூபாய் வரை உயர்த்த உள்ளோம் என்று டாடா மோட்டார்ஸின் தலைவர் மாயன்க் பெரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  டாடா மோட்டார்ஸ் மட்டுமில்லாமல் டொயோட்டா மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஏப்ரல் மாதம் முதல் வாகனங்கள் விலையை ஏற்ற முடிவு செய்துள்ளன.

  டாடா மோட்டார்ஸ் தற்போது நேனோ, பிரீமியம் எஸ்யூவி என 2.36 லட்சம் முதல் 18.37 லட்சம் ரூபாய் வரையிலான கார்களை தயாரித்து விற்பனை செய்கிறது.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: