இந்திய மல்யுத்த வீரர்களுக்கு உதவ முன்வந்தது டாடா மோட்டார்ஸ்!

மல்யுத்த விளையாட்டை ஊக்குவிக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

Web Desk | news18
Updated: December 13, 2018, 7:56 PM IST
இந்திய மல்யுத்த வீரர்களுக்கு உதவ முன்வந்தது டாடா மோட்டார்ஸ்!
File image of Narsingh Yadav. Representational photo. (Getty Images)
Web Desk | news18
Updated: December 13, 2018, 7:56 PM IST
ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் பதக்கம் வெல்ல ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

டாடா மோட்டார்ஸ் மல்யுத்த வீரர்கள் வளர்ச்சித் திட்டம் மூலம் சர்வதேச பயிற்சியாளர்கள், பயிற்சிக்கூடம், பயிற்சிக்கான உதவியாளர்கள், பயிற்சி என அனைத்தும் வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தும் 2020-ம் ஆண்டு டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்காக டாடா மோட்டார்ஸ் எடுக்கும் முயற்சி என டாடா மோட்டார்ஸ் கூறுகிறது.

இதற்கும் மேலாக 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக இப்போதே இளம் திறமைசாலிகளைக் கண்டெடுக்கும் திட்டத்தையும் டாடா மோட்டார்ஸ் தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உடன் மூன்றாண்டுகளுக்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் கைழுத்திட்டுள்ளது. புதிய பயிற்சித் திட்டத்தின் கீழ் பெண், ஆண் என இரு பிரிவினர்களையும் சேர்த்து 50 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் கிரிஷ் வாக் கூறுகையில், “நாட்டின் மல்யுத்த வீரர்களிடம் கலந்தாலோசித்து இந்தப் பயிற்சித் திட்டத்தை வடிவமைத்துள்ளோம். இதன் மூலம் நாட்டில் மல்யுத்த விளையாட்டை இளம் வீரர்களிடம் கொண்டு சேர்த்து வளர்க்கலாம். அனைத்து உதவிகளுடன் இன்சூரன்ஸ் வசதியும் வீரர்களுக்கு செய்து தரப்படும்” என்றார்.

மேலும் பார்க்க: நடிகர் விஜய் சேதுபதியின் வெற்றிக் கதை...
First published: December 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...