ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஜனவரி 26ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய Tata Safari SUV: இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!

ஜனவரி 26ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய Tata Safari SUV: இந்த கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!

டாடா சஃபாரி

டாடா சஃபாரி

டாடா சஃபாரி 2021 விலை ஹாரியரை விட சற்றே அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

டாடா மோட்டார்சின் புதிய சஃபாரி (Safari) இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது வரவிருக்கும் முதன்மை எஸ்யூவி மூலம் இந்தியாவில் சின்னமாக கருதப்படும் "சஃபாரி" பிராண்ட் பெயரை மீண்டும் அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக கிராவிடாஸ் (Gravitas) என்று அழைக்கப்பட்ட ஏழு இருக்கைகள் கொண்ட எஸ்யூவி புதிய "டாடா சஃபாரி 2021" (Tata Safari 2021) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எஸ்யூவி ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான முன்பதிவு கூட ஏற்கனவே ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

1998ம் ஆண்டின் ஆரம்பகாலத்தில் டாடா சஃபாரி காரின் விற்பனை இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதுதவிர கார் பிரியர்களுக்கு எஸ்யூவி கலாச்சாரத்தின் முதல் விருப்பமாக அமைந்ததும் இந்த ப்ராண்ட் தான். தற்போது வெளியாகவுள்ள புதிய சஃபாரி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை குறித்து காண்போம்.

ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் (Six- and seven-seater experience):

2019ம் ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோவில், டாடா மோட்டாஸ் நிறுவனம் தங்களது 7 சீட்டர் எஸ்யூவியை பஸ்ஸார்டு (Buzzard) என்ற பெயரில் காட்சிக்கு வைத்திருந்தது. இதன்பின் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இதே எஸ்யூவி கிராவிட்டாஸ் (Gravitas) என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது. இது ஹாரியர் (Harrier) எஸ்யூவியின் ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட வெர்சனில் வழங்கப்படும் என கூறப்பட்டது. ஏழு இருக்கைகள் கொண்ட வெர்சனில் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்டுகளுடன் பெஞ்ச் வகை இருக்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விற்பனை 2020ம் ஆண்டே கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கார் தற்போது சஃபாரி (Safari) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது.

தோற்றம் மற்றும் வடிவமைப்பு (Look and design):

உண்மையில் "டாடா சஃபாரி 2021" ஹாரியரின் நீட்டிக்கப்பட்ட பதிப்பாக கருதப்படுகிறது. முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், இது ஹாரியர் எஸ்யூவி போல இருக்கும். வெளிப்புற வடிவமைப்பில் இருக்கும் ஒரே மாற்றம் பின்புறத்தில் சற்று மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் இடம்பெற்றிருக்கும். இருப்பினும், எஸ்யூவியின் ரூப்லைன் மற்றும் காரின் இடவசதியில் கணிசமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக இடத்தை உருவாக்க பின்புறம் செங்குத்து நிலையை கொண்டுள்ளது. மேலும் பின்புறத்தில் நியூ லுக் டெயில்-லாம்ப்களும் உள்ளன. நீளத்தைப் பொறுத்தவரை, ஹாரியரை விட சஃபாரி 63 மிமீ மற்றும் 80 மிமீ நீளமானது. ஹாரியர் வகையில் இருந்து சஃபாரியின் தோற்றத்தை வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காட்ட, இவை புதிய வண்ண விருப்பங்களுடன் வருகின்றன.

என்ஜின் (Engine):

வேகத்தை பொறுத்தவரை சஃபாரி, 2,741 மிமீ ஹாரியரின் அதே வீல்பேஸைப் பகிர்ந்து கொண்டாலும், ஆரம்பத்தில் இது டூ-வீல் டிரைவாக மட்டுமே வழங்கப்படும். 4-வீல் டிரைவ் மற்றும் எலக்ட்ரிக் வெர்சன் வரும் காலங்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினுக்கு வரும்போது, சஃபாரி, ஹாரியர் போன்று அதே 2.0 லிட்டர் கிரையோடெக் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இந்த எஞ்சினால் 170 பிஹெச்பி சக்தியையும் 350 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்ய முடியும்.

உட்புற அமைப்பு(Interior): 

புதிய சஃபாரி-யின் டாஷ்போர்டு அமைப்பு மற்றும் உட்புறங்கள் ஆகியவை ஹாரியருக்கு ஒத்ததாகவே அமைந்துள்ளன. இதன் டிரைவர் சீட் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ் செய்யக் கூடியதாக இருக்கும். மேலும் இதில் 8.8 அங்குல மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, சன்ரூஃப் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது ஒரு மின்னணு ஹேண்ட்பிரேக்கையும் கொண்டிருக்கும்.

Also read... ராயல் என்ஃபீல்ட் Continental GT 650 பைக்கின் புதிய அவதாரம் - இப்படியும் கூட மாடிஃபிகேஷன் செய்யலாமா?

விலை(Cost): 

டாடா சஃபாரி 2021 விலை ஹாரியரை விட சற்றே அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாரியர் வேரியண்ட்டிற்கு ரூ.3.48 லட்சம் முதல் ரூ .20.30 லட்சம் வரை விலையை ஒப்பிடும் போது, சஃபாரி ரூ.15 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG Hector Plus மற்றும் Mahindra XUV500 போன்ற வாகனங்களுக்கு போட்டியாக சஃபாரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில், இது ஹூண்டாயின் 7 இருக்கைகள் கொண்ட Creta- வுடன் போட்டியை எதிர்கொள்ளும். கிரெட்டா 2021 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல Ford நிறுவனமும் தனது புதிய சி-எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tata motors