Home /News /automobile /

விற்பனையில் தூள் கிளப்பும் டாடா மோட்டார்ஸ்... இத்தனை சதவிகித வளர்ச்சியா?

விற்பனையில் தூள் கிளப்பும் டாடா மோட்டார்ஸ்... இத்தனை சதவிகித வளர்ச்சியா?

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

Tata Motors நிறுவனம் பிப்ரவரி மாதம் மட்டும் 77,733 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் பிப்ரவரி மாதம் மட்டும் 77 ஆயிரத்து 733 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போதும் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 40,777 கார்களை விற்பனை செய்தது. நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த மிகப்பெரிய விற்பனை இது தான். தற்போது பிப்ரவரி மாதத்திற்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் அம்மாதத்திற்கான வேலை நாட்கள் குறைவாக இருந்த போதும், கிட்டதட்ட அதற்கு சமமான பாசஞ்சர் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது பிப்ரவரி மாதத்தில் மட்டும் 39,981 பாசஞ்சர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ALSO READ |  Fixed Deposit திட்டத்தை இந்த வங்கிகளில் தொடங்கினால் இப்படியொரு சலுகையா?
 அறிக்கையின் படி, இந்திய சந்தையில் இருந்து 73,875 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 33,894 வணிக வாகனங்களும், இருந்தது, 39,981 பயணிகள் வாகனங்களும் அடங்கும். இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனையை சீரான வேகத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்துள்ள 39,981 கார்களில், 2846 எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். கடந்த ஆண்டு இதே மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் வெறும் 492 மின்சார வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு மின்சார வாகன விற்பனை வளர்ச்சி 487 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ALSO READ |  நடைமுறையில் உள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை 8 விழுக்காடாக உயர்த்த முடிவு?

வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையில் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதை இந்த புள்ளி விபரங்கள் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகின்றன.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 37,135 ஐசி இன்ஜின் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதன் மூலம் அதன் விற்பனை வளர்ச்சி 38.91 சதவீதம் உயர்ந்துள்ளது.

ALSO READ |  அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
 

கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது பாதுகாப்பு ரேட்டிங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால் தான் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் விற்பனை சதவீத அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனையான டாப் கார்களின் பட்டியலில் டாடா நெக்ஸான் 5வது இடம் பிடித்துள்ளது.

2021ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியின் படி, டாடா மோட்டார்ஸ் 35,300 கார்களை விற்பனை செய்து, ஹூண்டாயை முந்திக்கொண்டு பயணிகள் வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tata motors

அடுத்த செய்தி