ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நெக்சான், டியாகோ வாகனங்களுக்கு அசத்தலான தள்ளுபடியை அறிவித்தது டாடா மோட்டார்ஸ்

நெக்சான், டியாகோ வாகனங்களுக்கு அசத்தலான தள்ளுபடியை அறிவித்தது டாடா மோட்டார்ஸ்

Tata Nexon XM (S)

Tata Nexon XM (S)

நெக்சான், டியாகோ வாகனங்களுக்கு அசத்தலான தள்ளுபடியை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதனால் வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்த நிலையில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் வாகன உற்பத்தி ஆரம்பித்த பிறகு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் விற்பனையின் அடிப்படையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2020ம் ஆண்டு நவம்பரில் டாட்டா மோட்டார்ஸ் 108 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் இந்த ஆண்டு முடிவுக்கு வருவதால், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் பழைய ஸ்டாக்குகளை விரைவில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதற்காக, நிறுவனம் அதன் ஆண்டு இறுதி தள்ளுபடியை வெளியிட்டுள்ளது. கிளியரன்ஸ் நோக்கத்திற்காக இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் தள்ளுபடியைக் கொண்ட அனைத்து மாடல்களும் அதனுடன் கவர்ச்சிகரமான சலுகைகளையும் கொண்டுள்ளன. இது குறித்து கார்டோக்கில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஆண்டு இறுதி விற்பனை டிசம்பர் 31 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரபலமான வாகனங்களில் வழங்கப்படும் தள்ளுபடி குறித்து தெரிவித்து கொள்ளுங்கள்.

டாடா தியாகோ (Tata Tiago)

இந்த மலிவு விலை மற்றும் நுழைவு-நிலை ஹேட்ச்பேக் வாகனம் உற்பத்தியாளரிடமிருந்து இப்போது பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. தற்போது, கார் தயாரிப்பாளர் தியாகோவை ரூ.15,000 மதிப்புள்ள நுகர்வோர் தள்ளுபடியுடன் ரூ.10,000 பரிமாற்ற போனஸுடன் வழங்கி வருகின்றனர்.

Also read: கார்களுக்கு ரூ.5 லட்சம் வரை சலுகைகள் வழங்கும் ஃபோர்ட் நிறுவனம்

டாடா டைகர் (Tata Tigor)

டைகர் ஒரு சப்-4 மீட்டர் காம்பாக்ட் செடான் ஆகும். இது இப்போது பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கிறது. தியாகோவைப் போலவே, இந்த கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. டைகர் வாகனத்தை வாங்க தயாராக உள்ளவர்கள் இதனை ரூ.15,000 மதிப்புள்ள நுகர்வோர் திட்டத்துடனும் ரூ.15,000 பரிமாற்ற போனஸுடனும் பெறலாம்.

டாடா நெக்சான் (Tata Nexon)

இந்தியாவில் முதன்முதலில் குளோபல் என்சிஏபி செயலிழப்பு சோதனையில் 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற வாகனம் டாடா நெக்சான். இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. இந்த இரண்டு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. தற்போது ஆண்டு இறுதி தள்ளுபடியில், டாடா நெக்ஸன் ரூ.15,000 மதிப்புள்ள பரிமாற்ற சலுகையுடன் வழங்கப்படுகிறது.

டாடா ஹாரியர் (Tata Harrier)

இந்த கார் டாடா மோட்டார்சின் முதன்மை எஸ்யூவியாக மாறியுள்ளது. ஹாரியர் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜினுடன் வருகிறது. இது மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது. இதனை வாங்குபவர்கள் ரூ.25,000 மதிப்புள்ள நுகர்வோர் தள்ளுபடியையும், ரூ.40,000 மதிப்புள்ள பரிமாற்ற சலுகையையும் பெறலாம். எஸ்யூவியின் கேமோ, டார்க் பதிப்பு, எக்ஸ்இசட் + மற்றும் எக்ஸ்இசட்ஏ + மாறுபாடு ரூ.40,000 மதிப்புள்ள பரிமாற்ற போனஸுடன் மட்டுமே வழங்கப்படுகின்றன என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published by:Rizwan
First published:

Tags: Tata motors