Home /News /automobile /

கிட்டத்தட்ட 1000 கோடி நஷ்டம், இருந்தாலும் வளர்ச்சிப் பாதை தான் - டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் அறிக்கை

கிட்டத்தட்ட 1000 கோடி நஷ்டம், இருந்தாலும் வளர்ச்சிப் பாதை தான் - டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் அறிக்கை


டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

கோவிட் பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட, ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு நிகர இழப்பு என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    இந்தியா மட்டுமன்றி உலகிலேயே ஆட்டோமொபைல் துறை பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், எதிர்காலத்திற்கு பசுமையான சுற்றுப்புறத்தை வழங்கவும் மாற்று எரிபொருள் முயற்சியாக உலகம் முழுவதுமே எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று உலகம் முழுவதிலுமே கணிக்கப்பட்டு வருகிறது.

    அதை நிரூபிக்கும் விதமாக இந்தியா மற்றும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் பலரும் இந்தியாவில் இரண்டு சக்கர வாகனம் முதல் சொகுசு கார்கள் வரை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். பில்லியன் கணக்கில் முதலீடுகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரு பக்கம்  ஆட்டோமொபைல் துறையில் இத்தனை முன்னேற்றங்கள் காணப்பட்டுவரும் சூழலில்   டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாப நஷ்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

    கோவிட் பெருந்தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்திலும் கூட, ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு நிகர இழப்பு ஏற்பட்டதாக  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஜனவரி 21 முதல் மார்ச் 21 வரையிலான மூன்று மாத காலத்தில் ரூ. 1645.68 நிகர லாபம் ஈட்டியுள்ளதாக 2020-2021 ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த வியாழன் அன்று வெளியான கடந்த நிதியாண்டுக்கான நான்காவது காலாண்டு, அதாவது ஜனவரி 22 முதல் மார்ச் 22 வரையிலான மூன்று மாத காலத்தில், ரூ.992.05 கோடி நிகர நஷ்டம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    ALSO READ | டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

    மார்ச் 22 முடிந்த காலாண்டில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 992 கோடி ரூபாய்கள் இருந்தாலும், அதற்கு முந்தைய ஆண்டு, அதே காலத்தில் 7585 கோடி நிகர நஷ்டமாக இருந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட 6000 கோடி ரூபாய் நஷ்டம் குறைந்து நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 45,000 கார்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளதாக நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தோராயமாக 25,000 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போதும் 66% வளர்ச்சி இருப்பதை காண முடிகிறது. ஒரே ஆண்டில், ஏப்ரல் மாதத்தில் வைத்து ஒப்பிடும்போது 20,000 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்பது ஆச்சரியமான மற்றும் அபாரமான முன்னேற்றம்.

    டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்தியேகமான இன்டெர்னல் கம்பஷன் எஞ்சின் உள்ள வாகனங்கள் 39 ஆயிரத்துக்கும் மேல், கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையானது. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடும் போது, 60% வளர்ச்சி கண்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: TATA, Tata motors

    அடுத்த செய்தி