Home /News /automobile /

மாஸ் காட்டி வரும் டாடா நிறுவனம்.. மொத்த விற்பனையில் 82 சதவீதம் அதிகரிப்பு.!

மாஸ் காட்டி வரும் டாடா நிறுவனம்.. மொத்த விற்பனையில் 82 சதவீதம் அதிகரிப்பு.!

Tata Motors

Tata Motors

TATA Motors | டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் ஜூன் 2022ல் தன்னுடைய மொத்த விற்பனையை 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் மும்பையைத் தலையிடமாகக்கொண்டு செயல்படும் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இயங்கி வருகிறது. மக்களின் தேவைகளைப் புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் பல புதிய வடிவிலான கார்கள் வடிவமைக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக நெக்ஸான் கார் இந்நிறுவனத்திற்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் கார்களைப் பொறுத்தவரை டாடா நிறுவனம், புதிதாக அப்டேட் செய்யப்பட்ட சஃபாரி மற்றும் ஹாரியார் பெட்ரோல் காரையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுவருவதோடு, டாடா நிறுவனத்தின் வாகனங்கள் தரமாக இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர். இதனால் நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கு செம வரவேற்பும் கிடைத்துள்ளது.

    இந்த சூழலில் தான், டாடா மோட்டார்ஸ் ஜூன் 2022-ல் மொத்த உள்நாட்டு விற்பனையில் 82 சதவீதம் அதிகரித்து 79,606 வாகனங்களை விற்றுள்ளது. மேலும் டாடா மோட்டார்ஸ் மே 2002ல் பயணிகள் வாகனப்பிரிவில் 43, 341 கார்களை விற்றது. இவை ஆண்டுக்கு ஆண்டு 185 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் கடந்தாண்டு அதாவது மே 2021ல் டாடா நிறுவனம், 15,181 கார்களை டெலிவரி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தாண்டு மே மாதத்தில் 39,887 ICE பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. இதோடு இந்நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விற்பனை 626% அதிகரித்து 3,454 ஆகவும் இருந்தது.

    இதுக்குறித்து Tata Motors Passenger Vehicles லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா தெரிவிக்கையில், 2022-23 காலாண்டில், PV விற்பனை 1,30,125 யூனிட்களாக இருந்தது. குறிப்பாக கொரோனா தொற்றினால் சீனாவில் ஏற்பட்ட லாக்டவுன் காரணமாக கார் சப்ளைகள் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் பயணிகள் வாகனங்களுக்கானத் தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் 2022- 2023 முதல் காலாண்டில் மின்சார வாகன விற்பனையானது 9,283 மற்றும் ஜூன் 2022 ல் 3, 507 யூனிட்களுடன் அதிகபட்ச மாதாந்திர விற்பனையுடன் புதிய உச்சத்தை எட்டியள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



    இதோடு மட்டுமின்றி இனி வரும் காலங்களில், கார்களுக்குத் தேவையான முக்கியமான எலக்ட்ரானிக் பொருள்கள் உள்பட சப்ளைகள் படிப்படியாக உயரும் எனவும் அதற்கான வேலைகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

    Also Read : இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டக்கூடிய டாப் 5 இ-ஸ்கூட்டர்கள் இதோ!

    மேலும் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக் கூறுகையில், விநியோகம் பாதிக்கப்பட்டாலும் பயணிகள் வாகனங்களுக்கானத் தேவை தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக சாலை கட்டுமானம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் போன்றவை தன்னுடைய விற்பனையில் வளர்ச்சிப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக டாடா நிறுவனம் கடந்த மே மாதமும் ஹூண்டாய் நிறுவனங்களைப் பின்னுத்தள்ளி தொடர்ந்து விற்பனையில் முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Tata motors

    அடுத்த செய்தி