இந்தியாவிலேயே மோசமான வீழ்ச்சியை அடைந்த டாடா மோட்டார்ஸ்..!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி கடந்த மாதத்தில் 26.7 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவிலேயே மோசமான வீழ்ச்சியை அடைந்த டாடா மோட்டார்ஸ்..!
டாடா மோட்டார்ஸ்
  • News18
  • Last Updated: October 3, 2019, 5:59 PM IST
  • Share this:
இந்தியாவிலேயே மிகவும் மோசமான வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.

செப்டம்பர் மாதம் அதிகப்படியான வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சந்தித்துள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தொடர் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 56 சதவிகித வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

கடந்த 2018 செப்டம்பரில் டாடா 69,991 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு 36,376 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு விற்பனையிலும் 50 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 64,590 வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகியிருந்தன. ஆனால், 2019 செப்டம்பரில் 32,376 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.


இந்தியாவிலேயே இவ்வளவு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ள ஒரே நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மட்டும்தான். இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசூகி கடந்த மாதத்தில் 26.7 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் 14.8 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மேலும் பார்க்க: மஹிந்திரா உடன் இணைந்தது ஃபோர்டு... விற்பனையை அதிகரிக்க கூட்டணியா?

நம்ம வீட்டுப்பிள்ளை வெற்றியா? தோல்வியா?

Loading...

First published: October 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...