ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 90 சதவீத பங்குகளுடன் முன்னணி வகிக்கும் டாடா நிறுவனம்.!

எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 90 சதவீத பங்குகளுடன் முன்னணி வகிக்கும் டாடா நிறுவனம்.!

டாடா நெக்ஸான் EV

டாடா நெக்ஸான் EV

TATA Motors EV | எலக்ட்ரிக் வாகன பிரியர்களிடம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் இவி விற்பனை தற்போது உயர்ந்து வரும் நிலையில், புதிதாக 10 புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இயங்கி வருகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளைப் புரிந்து அவர்களுக்கு ஏற்ற வகையில் பல புதிய வடிவிலான கார்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்றைக்கு வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதால், டாடா நிறுவனமும் அத்தகைய கார்களை வடிவமைத்து மற்ற கார் நிறவனங்களை விட முன்னணியில் உள்ளது. குறிப்பாக டாடா மோட்டார்ஸ் மற்ற எலக்ட்ரிக் வாகன (EV) தயாரிப்பாளர்களை விட 90 சதவீத பங்குகளுடன் முன்னணில் உள்ளது.

எலக்ட்ரிக் வாகன பிரியர்களிடம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் இவி விற்பனை தற்போது உயர்ந்து வரும் நிலையில், புதிதாக 10 புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் இருந்து வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திப் பிரிவில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நெக்ஸான் EV விற்பனை தற்போது உயர்ந்து வரும் நிலையில், மேலும் புதிதாக 10 புதிய வாகனங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, இந்தாண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 எலெக்ட்ரிக் கார்களில் (Electric vehicle) 9 கார்கள் டாடா நிறுவனத்தின் தயாரிப்பாகும். இப்படி முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பாளராக உயர்ந்தது பெரும்பாலும் நெக்ஸான் EV கார்களின் மூலம் தான். கடந்த செப்டம்பர் வரை டாடா நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பான நெக்ஸான் EV 21,997 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மேலும் இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ராக் கார்களில் இது தான் அதிகமாக உள்ளது.

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எலக்ட்ரிக் கார்களுக்கு அடுத்தப்படியாக கடந்த செப்டம்பரில் டாடா Tigor EV 7,903 யூனிட்கள் வரை விற்பனையாகியுள்ளது. இந்தியாவில் MG மோட்டரின் முதல் மின்சார SUV-ZS EV – 2418 யூனிட்கள் விற்பனையாகி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதோடு ஹுண்டாயின் ஒரே EV கோனா மிகவும் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் EV போன்ற வெற்றியை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இறுதியாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நான்காவது கார் என்ற இடத்தில் Kia EV 6 உள்ளது. இந்த கார்கள் கடந்த செப்டம்பர் வரை 16 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

இவ்வாறு மற்ற கார் உற்பத்தி நிறுவனங்களை விட இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து செயல்படுவதால் மட்டுமே நம்பர் 1 என்ற இடத்தில் இருக்க முடிகிறது என்ற கருத்து எழுந்துள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric Cars, Tata motors