Nexon எலக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் சாதனை!

Tata Nexon Ev

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனமான Tata Tigor EV-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

  • Share this:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் 1,022 யூனிட் நெக்ஸான் EV SUV கார்களை விற்று, எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் பெருமைக்குரிய சாதனையை செய்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் ஒரே மாதத்தில் 1,000 யூனிட்டுகளுக்கு மேல் அதன் EV வாகனத்தை விற்றுள்ளது இதுவே முதல் முறை. Nexon EV காரின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த கார் ஸ்போர்ட்டி டிசைன், டெக்-லோடட் கேபின் மற்றும் 312 கிமீ தூரத்தை வாடிக்கையாளர்களுக்கு தருகிறது.

டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் வரை இந்தியாவில் Nexon EV காரின் 28,018 யூனிட்களின் மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டு இருக்கிறது. சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய எலெக்ட்ரிக் வாகனமான Tata Tigor EV-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் புதிய சாதனையை படைத்துள்ள நெக்ஸான் EV காரில் கொடுக்கப்பட்டுள்ள மேலும் பல சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த காரில் 26kWh லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது.

டிசைனை பொறுத்த வரை நெக்ஸான் EV, பிளாக் பேனலை கொண்டுள்ளது. நேர்த்தியான ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், சில்வர் ஸ்கிட் பிளேட் மற்றும் பரந்த காற்று வென்டிலேட்டரை கொண்டுள்ளது.

மேலும் இந்த எஸ்யூவி காரில் 16 இன்ச் அலாய் வீல்கள்,wrap-around LED டெயில் லைட்ஸ் மற்றும் ஷார்க்-ஃபின் ஆண்டெனா உள்ளது. ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக சுமார் 312 கிலோமீட்டர் வரை ஓடும் திறன் கொண்டது.

Also read: மஹிந்திரா தார் எஸ்யூவியில் ஸ்டண்ட்.. சிக்கலில் யூடியூபர்கள்

தவிர அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்த கார் ஒரு ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் விநியோகத்துடன் (EBD) கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. உள்நாட்டில் (இந்தியாவில்) பேசிக் மாடல் Nexon EV XM விலை ரூ.13.99 லட்சம் முதலும், இந்த மாடல் காரின் டாப் என்ட் மாடலான Nexon EV XZ+ ரூ.16.85 லட்சம் முதலும் துவங்குகிறது. இந்த Tata Nexon EV 3-ஃபேஸ் பெர்மனன்ட் மேக்னட் சிங்கர்னஸ் மோட்டார் மற்றும் 30.2kWh பேட்டரி பேக் ஆகியவற்றை கொண்டுள்ளதால், 1 மணிநேரத்திற்குள் 0-80% வரை சார்ஜ் ஆகி விடும் என்று கூறப்படுகிறது.

Also read:   வெள்ள நீரில் சீறி வியக்க வைத்த பொலீரோ கார்!

இந்த காரில் சன்ரூஃப், கீ-லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பவர் விண்டோஸ் மற்றும் அட்ஜஸ்ட்டபுள் ஸ்டீயரிங், 5 சீட்டர் கேபின் உள்ளிட்டவை காணப்படுகிறது. இந்த காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சப்போர்ட்டுடன் 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Arun
First published: