ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஜனவரி 2022-ல் இதுவரை இல்லாத சிறந்த மாதாந்திர விற்பனையை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்..

ஜனவரி 2022-ல் இதுவரை இல்லாத சிறந்த மாதாந்திர விற்பனையை பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்..

Tata Motors

Tata Motors

Tata Motors | டாடா பஞ்ச் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 SUV-க்களும் கடந்த மாதம் இந்தியாவில் 10,000-க்கும் அதிகமான விற்பனையை ஈட்டி, டாடாவின் SUV விற்பனையில் முக்கிய பகுதியை உருவாக்கி இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இதுவரை இல்லாத சிறந்த மாதாந்திர விற்பனையை கடந்த மாதம் அதாவது ஜனவரி 2022-ல் பதிவு செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2022 ஜனவரியில் சர்வதேச சந்தைகள் உட்பட மொத்த வாகன விற்பனையில் 76,210 யூனிட்களை விற்று 27% வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இதனால் தங்கள் நிறுவனம் 2022-ஆம் ஆண்டை வெற்றிகரமாக துவக்கி இருப்பதாக மகிழ்ச்சியும் தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ‘கடந்த மாதம் ( ஜனவரி 2022) இந்தியாவில் சுமார் 40,777 யூனிட் பேசேஞ்சர் வெஹிகிள்களை (passenger vehicles) விற்று உள்ளதாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் அதாவது 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 51 சதவீத விற்பனை வளர்ச்சியை குறிக்கிறது. ஏனென்றால் 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சுமார் 26,978 யூனிட் பேசேஞ்சர் வெஹிகிள்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்றது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேசேஞ்சர் வெஹிகிள் செக்மென்ட்டில் சிறந்த மாதாந்திர விற்பனையை பதிவு செய்ததோடு,கடந்த மாதம் இந்தியாவில் இதுவரை இல்லாத சிறந்த SUV விற்பனையையும் பதிவு செய்து இருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவில் சுமார் 28,108 யூனிட் SUV-க்களை விற்பனை செய்து இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் டாடாவின் SUV வரம்பில் பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி உள்ளிட்ட கார்கள் அடங்கும். மேலும் கூடுதலாக டாடா மோட்டார்ஸ் அதன் உற்பத்தி ஆலைகளில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது மார்ச் 2007-க்கு பிறகு அதிக மாதாந்திர உற்பத்தியையும் பதிவு செய்து இருக்கிறது.

டாடா பஞ்ச் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 SUV-க்களும் கடந்த மாதம் இந்தியாவில் 10,000-க்கும் அதிகமான விற்பனையை ஈட்டி, டாடாவின் SUV விற்பனையில் முக்கிய பகுதியை உருவாக்கி இருக்கின்றன. இந்தியாவில் Tigor EV மற்றும் Nexon EV ஆகியவை இணைந்து 2,892 யூனிட்கள் விற்பனையாகி இதுவரை இல்லாத அளவுக்கு EV-க்களின் விற்பனை வளர்ச்சியை கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கண்டுள்ளது. டாடா மோட்டார்ஸின் போர்ட்ஃபோலியோவில் உள்ள CNG கார்களை பொறுத்தவரை Tigor iCNG மற்றும் Tiago iCNG ஆகிய இரண்டும் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க புக்கிங்ஸ்களை பெற்றுள்ளன.

அதே போல ஜனவரி 19, 2022 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Tiago iCNG மற்றும் Tigor iCNG ஆகியவை கடந்த மாதம் 3,000 யூனிட் என்ற விற்பனை அளவை எட்டி உள்ளன. அதாவது கடந்த மாதம் இந்தியாவில் Tiago மற்றும் Tigor ஆகியவற்றின் மொத்த விற்பனையில் CNG வாகனங்கள் 42 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன. கடந்த பல மாதங்களாகவே சிறப்பான விற்பனை வளர்ச்சியை டாடா மோட்டார்ஸ் பதிவு செய்து வருகிறது. 2021 டிசம்பரில் பல கார் நிறுவனங்களின் தயாரிப்புகள் மந்தமான விற்பனையை பதிவு செய்த போதும் டாடா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, Suv car, Tata motors