புதிய எஸ்யுவிக்கு `ஹேரியர்’ என பெயர் சூட்டியது டாடா

புதிய எஸ்யுவிக்கு `ஹேரியர்’ என பெயர் சூட்டியது டாடா
ஹேரியர்
  • News18
  • Last Updated: July 11, 2018, 7:30 PM IST
  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய  எஸ்யுவி காருக்கு  ‘ஹேரியர்’ என்று பெயர் சூட்டியுள்ளது. லேண்ட் ரோவர் வகை கார் மாடலை பயன்படுத்தி இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஹெச்5எக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த மாடலில் 5 இருக்கை காருக்கு மட்டுமே ஹேரியர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  7 இருக்கை கொண்ட காருக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. ஹேரியரின் டீசர் புகைப்படத்தில் அக்காரின் பம்பர் டிசைனும் கிரில்லின் கீழ்ப்பகுதியும், எல் இ டி விளக்குகள் உள்ள கிரில்லின் மேல் பகுதியும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கார் எஸ்யுவி வகை கார் சந்தையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று டாடா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் இம்பாக்ட் 2.0 டிசைனுடன் வெளிவரும் முதல் கார் ‘ஹேரியர்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த காரை டாடா நிறுவனம், பிரபலமான லேண்ட் ரோவர் ஃப்ரீலாண்டருடன் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.டாடா ஹேரியரின் டீசர் லுக்

டாடா ஹேரியர் 2.0-லிட்டர் டீசல் இன்ஜினுடன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இதன் விலை ரூ.17 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. வரும் 2019-ம் ஆண்டு முதல் ‘ஹேரியர்’ விற்பனைக்கு வரும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.டாடா  நிறுவனத்தின் அதிகம் விற்கும் கார்களில் பிரபலமான லேண்ட் ரோவர் வகையை சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே லேண்ட் ரோவர் டிசைனில் வரும் ஹேரியர் காரை எதிர்நோக்கி கார் பிரியர்களும் வாடிக்கையாளர்களும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading