ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

புத்தாண்டு சலுகையாக 1 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு...!

புத்தாண்டு சலுகையாக 1 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு...!

சர்வதேச பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கான ரேங்கிங்-ல் நெக்ஸான் 5-க்கு 5 என முழு மதிப்பெண் பெற்ற இந்தியாவின் முதல் கார் ஆகும்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  டாடா மோட்டார்ஸ் தனது கார்களுக்கு புத்தாண்டு சலுகையாக 1 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

  2019-ம் ஆண்டு நிறைவுபெறப் போவதை அடுத்து பல கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு விலைத் தள்ளுபடியை அறிவித்து வருகின்றனர். அதிகப்பட்சமாக டாடா டியாகோ ஹேட்ச்பேக், டிகோர் செடான் மற்றும் நெக்ஸான் எஸ்யூவி-க்கு நல்ல விலைத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  விலைத் தள்ளுபடி உடன் கேஷ் பேக், எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட இன்னபிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. நாடு முழுவதும் ஒரே விலைச் சலுகையாக இல்லாமல் தள்ளுபடி நகருக்கு நகர் மாறுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. டாடா டிகோர் கார்களுக்கு 1 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது.

  டாடா நெக்ஸானுக்கு 95 ஆயிரம் ரூபாய் சலுகை கொடுக்கப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கான ரேங்கிங்-ல் நெக்ஸான் 5-க்கு 5 என முழு மதிப்பெண் பெற்ற இந்தியாவின் முதல் கார் ஆகும். சமீபத்திய ஹிட் கார்களான ஹூண்டாய் வென்யூ, மாருதி விதாரா ப்ரெஸ்சா, மஹிந்திரா XUV300 மற்றும் ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட் ஆகிய கார்களுக்குப் பெரும் போட்டியாக முன்னனியில் நிற்கிறது நெக்ஸான்.

  டாடா டியாகோ காருக்கு 90 ஆயிரம் ரூபாய் வரையில் ஆஃபர் உள்ளது. விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட், BS-VI வெர்ஷன் அப்டேட் எனப் பல டியோகோ-வில் வர உள்ளன.

  மேலும் பார்க்க: நியூஸ்18 ஆட்டோ விருதுகள்! 2019-ம் ஆண்டின் மிகச்சிறந்த டாப் 5 எஸ்யூவி/ எம்பிவி கார்கள்

  Published by:Rahini M
  First published:

  Tags: TATA