குறிப்பிட்ட வாகனங்களுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ்!

மாதிரி படம்

இந்த பிராண்ட் மார்ச் 31 வரை அதன் குறிப்பிட்ட வாகனங்களில் ரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020ம் ஆண்டு வாகன உற்பத்தி பெரும் வீழ்ச்சியை சந்தித்தப் பிறகு, தற்போது உலகெங்கிலும் வாகன உற்பத்தி தொழில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் விற்பனையை அதிகரிப்பதற்காக சில கார் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன்களையும் அறிமுகப்படுத்த உள்ளன. அந்த வகையில் இந்திய கார் உற்பத்தி நிறுவனமான டாடாவும் அதன் விற்பனையை அதிகரிப்பதற்காக சில கார்களில் தள்ளுபடி திட்டங்களையும் நன்மைகளையும் கொண்டு வந்துள்ளது.

இந்த பிராண்ட் மார்ச் 31 வரை அதன் குறிப்பிட்ட வாகனங்களில் ரொக்க தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ் ஆகியவற்றை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களை வாங்குபவர்கள் அதிகபட்சமாக ரூ.70,000 வரை தள்ளுபடியை பெறலாம். இதுதொடர்பாக ஆட்டோகாரில் வெளியான அறிக்கையின்படி, தள்ளுபடிகள் கிடைக்கும் கார்களின் விவரங்கள் குறித்து பாப்போம்.

டாடா ஹாரியர் (Tata Harrier): இது மிட்-சைஸ் எஸ்யூவி ஆகும். இது 170 ஹெச்பி, 2.0 லிட்டர் டர்போ-டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வருகிறது. இந்த காரில் பனோரமிக் சன்ரூஃப், 8.8 அங்குல தொடுதிரை மற்றும் 17-அங்குல உலோகக்கலவைகள் அதன் டாப்-ஸ்பெக் டிரிமில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை வாங்குபவர்கள் மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்தால் இந்த நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.70,000 வரை சலுகைகளைப் பெற முடியும். இதில், ரொக்க தள்ளுபடி மற்றும் பரிமாற்ற போனஸ் ஆகியவை அடங்கும்.

டாடா நெக்ஸான் (Tata Nexon): இந்த மார்ச் மாதத்தில் டாடா நெக்ஸானை வாங்குவோர் அதன் டீசல் வேரியாண்டிற்கு ரூ .20,000 வரை சலுகைகளைப் பெறலாம். இது தவிர, காரின் முழு மின்சார மாறுபாடான நெக்ஸான் EV-யை ரூ .10,000 மதிப்புள்ள பரிமாற்ற போனஸுடன் வாங்கலாம். இந்த கார் பெட்ரோல் எஞ்சின் வேரியண்டிலும் கிடைக்கிறது. நெக்ஸானில் 110 ஹெச்பி, 1.5 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 120 ஹெச்பி, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் இணக்கமாக உள்ளன.

Also read... விற்பனையில் முதலிடம் பிடித்த டொயோட்டா பார்ச்சூனர் - பிப்ரவரி வரை 2,053 யூனிட்டுகள் விற்றுத்தீர்த்தது!

டாடா டைகோர் (Tata Tigor): இந்த காம்பாக்ட் செடான் 86 ஹெச்பி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாதம், இந்த காரை வாங்கிவோம் ரூ.33,000 வரை சலுகைகளை பெறலாம். இதில் பண தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை அடங்கும்.

டாடா டியாகோ (Tata Tiago): குளோபல் என்.சி.ஏ.பி-யிலிருந்து 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டியாகோவின் ஹேட்ச்பேக், ரூ .28,000 வரை சலுகைகளை வழங்குகிறது. இந்த வாகனம் தனது சக்தியை 86 ஹெச்பி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலிருந்து ஈர்க்கிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: