Home /News /automobile /

டாடா கார்களுக்கு ரூ.60,000 வரை ஆபர்.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

டாடா கார்களுக்கு ரூ.60,000 வரை ஆபர்.. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

Tata Cars

Tata Cars

Discount for Tata Cars: டாடா குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களை தொடர்ந்து வழங்குகிறது

    கடந்த சில மாதங்களாக டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விற்பனை அமோகமாக உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக கடந்த டிசம்பர் 2021-ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹூண்டாய் நிறுவனத்தை டாப் செல்லிங் பட்டியலின் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது. மேலும் மாதாந்திர யூனிட் டிஸ்பேட்ச்களின் அடிப்படையில் டாடாவிற்கு இந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒரு சிறந்த மாதமாகும்.

    இதற்கெல்லாம் காரணம் - கடந்த மாதம் பல்வேறு வகையான கார்களுக்கு பெருமளவிலான தள்ளுபடிகளை வழங்கும் டாடா மோட்டார்ஸின் உத்தியே ஆகும். விற்பனை அதிகரித்து வரும் போதிலும், டாடா இன்னும் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர்களை தொடர்ந்து வழங்குகிறது, இதன் கீழ் மாடலைப் பொறுத்து மொத்தம் ரூ.60,000 வரை சலுகைகள் கிடைப்பதாக ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்களுக்கு என்னென்ன ஆபர்? இதோ விவரங்கள்:

    டாடா ஹாரியர் (Tata Harrier)

    டீசலில் மட்டுமே இயங்கும் ஹாரியர் அதன் பெரிய மற்றும் வசதியான கேபின், நன்கு வடிவமைக்கப்பட்ட கடினமான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக வாங்குபவர்களை ஈர்க்கும் ஒரு மாடல் ஆகும். இந்த காரின் 2021 மாடல் மீது ரூ.60,000 வரையிலான சலுகைகள் கிடைக்கிறது. இதில் (ஸ்டாக் இருப்பதை பொறுத்து) ரூ.20,000 வரையிலான ரொக்க நன்மைகளும் அடங்கும். புதிய 2022 மாடலை பொறுத்தவரை ரூ.40,000 வரை மட்டுமே எக்ஸ்சேன்ஜ் பஆபர் கிடைக்கும். டார்க் எடிஷன் டிரிம்மிங்ஸ் ரூ.20,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் வருகிறது. கார்ப்பரேட் பர்ச்சேசர்களுக்கு (corporate purchaser) இந்த எஸ்யுவி மீது ரூ.25,000 வரை சலுகைகள் கிடைக்கும்.

    Also read:  இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் ஜப்பானிய கார் நிறுவனம்

    டாடா சஃபாரி (Tata Safari)

    அன்சோல்ட் 2021 ஆம் ஆண்டு மாடல் டாடா சஃபாரிகளில், ரூ.60,000 வரையிலான பரிவர்த்தனை நன்மைகள் அணுக கிடைக்கும், அதே சமயம் புதிய 2022 மாடல்கள் மீது ரூ.40,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. மறுபுறம், டாப்-ஆஃப்-லைன் கோல்ட் எடிஷன் மாடல்கள் அது எந்த விதமான சலுகைகள் மற்றும் போனஸும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

    டாடா டியாகோ (Tata Tiago)

    டாடா டியாகோ மாடல் ஆனது பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்ட செடான்களால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு பிரிவில் தனித்து நிற்கிறது. அதற்கு முழு காரணமும் டாடா டியாகோவின் ஃபோர் டோர் கூஃபே அம்சமே ஆகும். இந்த காம்பாக்ட் செடானின் சிஎன்ஜி வகைகளை (CNG variants) தவிர்த்து, மற்றவைகளில் ரூ.25,000 வரையிலான சலுகைகள் அணுக கிடைக்கிறது.

    இதையும் படியுங்கள் : இந்தியாவில் Tata Punch SUV-யின் விலை ரூ.15,000 வரை உயர்ந்தது!

    டாடா நெக்ஸான் (Tata Nexon)

    நெக்ஸான் - டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும், ஏனெனில் டாடா நெக்ஸான் அழகியல் மிக்க வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறனை வழங்கும் ஒரு கார் ஆகும். டாடா நெக்ஸானின் பெட்ரோல் மாடல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் நன்மைகள் எதுவும் இல்லை என்றாலும், டீசல் மாடல்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.15,000 வரை கிடைக்கிறது. இந்த காம்பாக்ட் எஸ்யூவி-ஐ வாங்கும் கார்ப்பரேட் பர்ச்சேசர்களுக்கு ரூ.10,000 வரையிலான பலன்களைப் பெறலாம்.

    டாடா அல்ட்ராஸ் (Tata Altroz)

    இந்த பிப்ரவரி மாதத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் மீது ரூ.10,000 வரையிலான கார்ப்பரேட் பர்ச்சேஸ் வெகுமதிகள் அணுக கிடைக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: TATA, Tata motors

    அடுத்த செய்தி