குறைந்த சந்தா விலையில் நெக்ஸன் எலக்ட்ரிக் காரை வழங்கும் டாடா மோட்டார்ஸ்..!

டாடா மோட்டார்ஸ் முதல் 100 சந்தாதாரர்களுக்கு 'டாடா நெக்ஸன்' எலக்ட்ரிக் காரை குறைந்தபட்ச சந்தா விலையில் வழங்குவதாக சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்து பண்டிகை காலம் தொடங்கிய நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.

குறைந்த சந்தா விலையில் நெக்ஸன் எலக்ட்ரிக் காரை வழங்கும் டாடா மோட்டார்ஸ்..!
டாடா மோட்டார்ஸ் முதல் 100 சந்தாதாரர்களுக்கு 'டாடா நெக்ஸன்' எலக்ட்ரிக் காரை குறைந்தபட்ச சந்தா விலையில் வழங்குவதாக சிறப்புச் சலுகை அறிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்து பண்டிகை காலம் தொடங்கிய நிலையில், டாடா மோட்டார்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 11:23 PM IST
  • Share this:
முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 30 வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்தபட்ச சந்தா விலையில் நெக்ஸான் எலக்ட்ரிக் காரை வழங்குவதாக கவர்ச்சிகர அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றான "நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி" காரை மாதத்திற்கு ரூ.34,900 என்ற சந்தா விலையில் தருவதற்கு டாடா மோட்டார்ஸ் முன்வந்துள்ளது. வாடிக்கையாளரை ஊக்குவிக்கும் நோக்கில், சாலை வரி மற்றும் பதிவு செய்தல், காப்பீட்டைப் புதுப்பித்தல், சேவை மற்றும் பராமரிப்பு போன்று வழக்கமாக ஒரு கார் உரிமையாளருக்கு இருக்கும் எந்த சிக்கலும் இல்லாமல் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Also read: 6 மாதங்களுக்கு திறக்கப்பட்ட தாஜ்மஹால் - முதல் ஆளாக பார்வையிட்ட சீனர்


வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாவின் காலத்தை குறைந்தபட்சம் 12 மாதங்கள் முதல் 24, 36 மாதங்கள் வரை தேர்ந்தெடுக்கலாம். தற்போது, டெல்லி/என்.சி.ஆர், மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 5 முக்கிய நகரங்களில் இந்தச் சேவை வழங்கப்படுகிறது. ஓரிக்ஸ் ஆட்டோவுடன் இணைந்து வழங்கப்படும் இந்த சந்தா தொகுப்பில் காப்பீட்டுத் தொகை, அழைத்தால் 24x7 உதவி, குறிப்பிட்ட கால இடைவெளியில் சேவை மற்றும் இலவச டெலிவரி ஆகியவை அடங்கும்.

மேலும், வாடிக்கையாளர்கள் ஈ.வி. சார்ஜரைப் பெறுவார்கள். அதை தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது தனக்குத் தேவையான இடங்களில் அதைப் பொருத்திக்கொள்ளலாம். இந்த வசதியை ஆன்லைனில் எளிதாக பெறலாம். வாடிக்கையாளர்கள் தம் சந்தா காலத்தை நீட்டிக்கவோ வாகனத்தைத் திருப்பித் தரவோ முடியும்.டாடா மோட்டார்ஸின் மொபிலிட்டி சர்வீசஸ் தலைவர் தபங்கஜ் ஜுன்ஜா கார் பற்றி கூறுகையில், குடிமக்கள் எலெக்ட்ரிக் கார்களை எளிதில் அணுகக்கூடிய நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதை புதிய சந்தாதாரர்களுக்கு சலுகையுடன் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், உரிமையாளராக இருப்பதை விட பயனாளராக இருப்பது சிறந்தது என்றார்.இந்தச் சலுகை கார்ப்பரேட் நிறுவனங்கள், அடிக்கடி பணியிடமாற்றம் தேவைப்படும் நபர்கள், ஒரு குறிப்பிட்ட காலம் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் போன்றோருக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading