Punch, Nexon, Harrier மற்றும் Safari போன்ற கார்களில் புதிய கஸிரங்கா எடிசன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டாடா பஞ்ச் கஸிரங்கா எடிசனின் விலை ரூ.8.59 லட்சம் ஆகும். நெக்ஸான் கஸிரங்கா எடிசனில் பெட்ரோல் மாடல் கார் ரூ.11.79 லட்சம் ஆகும். ஹேரியர் கஸிரங்கா எடிசன் ரூ.20.41 லட்சமாக உள்ளது.
இருப்பதிலேயே அதிகபட்சமாக, 7 சீட்டர்களை கொண்ட சஃபாரி கஸிரங்கா எடிசனின் விலை ரூ.21 லட்சமாக உள்ளது. நெக்ஸான் கஸிரங்கா எடிசனில் டீசல் மாடல் என்றால் அதன் விலை ரூ.13.09 லட்சம் ஆகும். பஞ்ச் கஸிரங்கா எடிசனை ஐபிஎல் ரசிகர்களுக்கு மத்தியில் ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கஸிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகளை பாதுகாக்க நன்கொடை வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தியாவின் மாபெரும் தேசிய வன உயிரியல் பூங்காவுக்கு புகழாரம் சூட்டும் வகையில், அதன் பெயரை கார்களுக்கு டாடா நிறுவனம் சூட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ராஜன் அம்பா இதுகுறித்து கூறுகையில், “எஸ்யூவி கார்களை நோக்கி உலகத்தின் கவனம் இருக்கிறது. இந்தியாவிலும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. எங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் இந்த வகை எஸ்யூவி கார்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சந்தையில் நிலவும் இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இந்தியாவின் நம்பர் 1 எஸ்யூவி பிராண்டாக நாங்கள் உருவெடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி’’ என தெரிவித்தார்.
டாடா பஞ்ச் கஸிரங்கா எடிசன்
இது 5 சீட்டர் கார் ஆகும். ஏற்கனவே உள்ள பஞ்ச் மாடலுக்கும், இந்த கஸிரங்கா எடிசனுக்கும் மெக்கானிக்கல் ரீதியாக எந்த வேறுபாடும் இருக்காது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகும். லிட்டருக்கு 18.97 கி.மீ. வரையிலும் மைலேஜ் தருகிறது. இது கிராஸ்லாண்ட் பெய்ஜ் என்ற வகை கலரில் வருகிறது.
Also Read : டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி வாடைக்கு விட்டு சம்பாதிக்கும் சாமர்த்திய இந்தியர்
டாடா நெக்ஸான் கஸிரங்கா எடிசன்
இதில் ஓட்டுநர் மற்றும் ஓட்டுநருக்கு அருகில் உள்ள சீட் ஆகிய இரண்டிலும் வெண்டிலேஷன் வசதி உள்ளது. இதில் இருக்கும் ஏர் ப்யூரிபயர் காரணமாக சௌகர்யமாகவும், பாதுகாப்பனதாகவும் கேபின் இருக்கும்.
டாடா ஹேரியர் கஸிரங்கா எடிசன்
இதிலும் வெண்டிலேஷன் சீட்கள், ஏர் ப்யூரிபயர் போன்ற வசதிகள் உள்ளன. ஐ.ஆர்.ஏ. கனக்டெட் டெக்னாலஜி, ரிமோட் கமெண்ட்ஸ் போன்ற அதிநவீன வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Also Read : உங்கள் கார் பராமரிப்பதற்கான டிப்ஸ் இதோ!
டாடா சஃபாரி கஸிரங்கா எடிசன்
இது டாடா நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பாக கருதப்படுகிறது. அனைத்து சீட்களிலும் வெண்டிலேஷன் வசதி, வயர்லெஸ் சார்ஜர், ஆப்பிள் கார் பிளே போன்ற எண்ணற்ற வசதிகள் இதில் உள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.