Home /News /automobile /

நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி-யின் ஜெட் எடிஷன்களை அறிமுகபடுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்.!

நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி-யின் ஜெட் எடிஷன்களை அறிமுகபடுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ்.!

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

TATA Motors | Tata Nexon ஜெட் எடிஷனானது காற்றோட்டமான இருக்கைகள், டில்ட் செயல்பாடு கொண்ட மின்சார சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் AQi டிஸ்ப்ளே கொண்ட ஏர் ப்யூரிஃபையர் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டார்க் மற்றும் காசிரங்கா பதிப்புகளுக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி-களுக்கான புதிய ஜெட் எடிஷன் லைன்-அப்பை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களிலும் புதிய ஜெட் எடிஷன் உடனடியாக விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஜெட் எடிஷன்கள் ‘பிசினஸ் ஜெட்ஸ்’ மூலம் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த எடிஷன் SUV-க்கள் பிரத்தியேக இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனில் சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே Tata Nexon ஜெட் எடிஷனானது காற்றோட்டமான இருக்கைகள், டில்ட் செயல்பாடு கொண்ட மின்சார சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் AQi டிஸ்ப்ளே கொண்ட ஏர் ப்யூரிஃபையர் போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.

புதிய Tata Safari ஜெட் எடிஷன் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் வெர்ஷன்களில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் கிடைக்கிறது: இதன் XZ+ டீசல் 6 சீட்டரின் விலை ரூ. 21.45 லட்சம், XZA+ டீசல் 6 சீட்டரின் விலை ரூ. 22.75 லட்சம், XZ+ டீசல் 7 சீட்டரின் விலை ரூ. 21.35 லட்சம் மற்றும் XZA+ டீசல் 7 சீட்டரின் ரூ. 22.65 லட்சம் ஆகும். Tata Harrier ஜெட் எடிஷனை பொறுத்தவரை மேனுவல் ஆப்ஷன் வேரியன்ட்டின் விலை ரூ. 20.90 லட்சம் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வேரியன்ட்டின் விலை ரூ. 22.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.



அதே போல Tata Nexon ஜெட் எடிஷனானது XZ+ (P) டீசல், XZA+ (P) டீசல், Nexon XZ+ (P) பெட்ரோல் மற்றும் Nexon XZA+ (P) உள்ளிட்ட 4 வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது. இதில் XZ+ (P) டீசல் விலை ரூ.13.43 லட்சம், XZA+ (P) டீசல் விலை ரூ.14.08 லட்சம், XZ+ (P) பெட்ரோல் விலை ரூ.12.13 லட்சம், XZA+ (P) பெட்ரோல் ரூ.12.78 லட்சம் ஆகும். டாடா நெக்ஸான், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றின் ஜெட் எடிஷன்கள் earthy bronze body மற்றும் platinum silver ரூஃபின் டூயல்-டோன் கலவையில் வழங்கப்படும். முன்புறத்தில் ஜெட் பிளாக் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்களுடன் கூடிய அலாய்ஸ் பெயிண்ட் செய்யப்பட்ட எடிஷனும் உள்ளது.

Also Read : 10 லட்சத்திற்கும் குறைவான சிறந்த கார்களின் பட்டியல் இதோ..

இன்டீரியரில் டூயல்-டோன் ஒய்ஸ்டர் ஒயிட் மற்றும் கிரானைட் பிளாக் மற்றும் டெக்னோ-ஸ்டீல் ப்ரோன்ஸ் ஃபினிஷ் மிட்-பேட் டோர்ஸ் மற்றும் ஃப்ளோர் கன்சோல்களில் ப்ரோன்ஸ் அக்சன்ட்ஸ்களுடன் இன்ஸ்ட்ருமென்ட் பேனலில் ஈர்க்கும் மையமாக இருக்கிறது. எங்களின் நம்பர். 1 SUV பொஷிஷனை தக்க வைத்து எங்கள் தயாரிப்புகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்போம் என்பதற்கான எங்கள் New Forever வாக்குறுதியின்படி, புத்தம் புதிய JET வெர்ஷனை எங்கள் Safari, Harrier மற்றும் Nexon போர்ட்ஃபோலியோக்களில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறி இருக்கிறார் Tata Motors Passenger Vehicles Ltd.-ன் வைஸ் பிரசிடென்டான ராஜன் அம்பா கூறி இருக்கிறார்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Tata motors

அடுத்த செய்தி