Home /News /automobile /

கார்களின் விலையை உயர்த்திய டாடா - ஷாக்கில் வாடிக்கையாளர்கள்.!

கார்களின் விலையை உயர்த்திய டாடா - ஷாக்கில் வாடிக்கையாளர்கள்.!

TATA Motors

TATA Motors

TATA Motors | இந்திய சந்தையில், டாடா மோட்டார்ஸ் hatchback, SUV, மற்றும் sedan போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய எண்ணற்ற கார் மாடல்களை விற்பனை செய்கிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ், அதன் பயணிகள் கார்களுக்கான விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு கார் மாடல்களுக்கு ஏற்றவாறு இந்த விலை உயர்வு இருக்கும் என கூறப்படும் நிலையில், 0.55 சதவீதம் விலையை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன பிரிவின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும்.

    இந்திய சந்தைகளில் உள்ள பிற வாகன நிறுவனங்களும் இதே போன்ற காரணங்களை கூறி தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன. டாடா மோட்டார்ஸ் தனது கார்களின் விலையை உயர்த்துவது இந்த ஆண்டில் இது முதல் முறை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்திய மாடல்களின் விலைகளை சராசரியாக 1.1 சதவீதம் அதிகரித்தது. ஏப்ரல் 23, 2022 முதல் இந்திய சந்தையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. மூன்று மாதங்களுக்குள் அடுத்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல், ஜனவரி 2022ல், சராசரியாக 0.9 சதவீதம் விலை உயர்வை அறிவித்தது டாடா நிறுவனம்.

    Also Read : இந்தியாவில் 2022ல் மிகவும் பிரபலமான எலெக்ட்ரிக் கார்களின் விவரங்கள் இதோ!

    அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளைக் காரணம் காட்டி டொயோட்டா மற்றும் ஸ்கோடா போன்ற பிற பிராண்டுகளும் சில மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. வாகனத் தொழில்துறையானது கடுமையான chip பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதுடன், விநியோக செயல்முறையில் ஏற்படும் இடையூறுகளின் விளைவாக வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



    இதுகுறித்து டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் அதை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகள் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் விலை உயர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது நிறுவனம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : எலெக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு ரூ.10 லட்சம் வரை அரசே தள்ளுபடி... மாநில அரசின் ஆஃபரை பெறுவது எப்படி.?

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடும் கார்களுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது நிறுவனம் சார்பில் மீண்டும் விலையேற்றத்தை அறிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்த உள்ளீடு செலவுகள் இந்திய கார் சந்தையை மட்டுமல்ல, இரு சக்கர வாகன சந்தையையும் பாதிக்கிறது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இதே காரணத்திற்காக தனது மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்தது.



     

    இந்திய சந்தையில், டாடா மோட்டார்ஸ் hatchback, SUV, மற்றும் sedan போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய எண்ணற்ற கார் மாடல்களை விற்பனை செய்கிறது. இந்திய சந்தையில் Safari, Harrier, Tiago, மற்றும் Tigor போன்ற கார்களை டாடா விற்பனை செய்து வருகிறது. இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் கடந்த மாதம் மட்டும் 45,197 கார்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் 3,507 கார்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Automobile, Tata motors

    அடுத்த செய்தி