டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் பிரபல காரான ஹாரியர் எஸ்யூவி-யை (Harrier SUV) புதிய கலர் ஆப்ஷன்களுடன் அப்டேட் செய்துள்ளது. Harrier SUV-ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 2 வெளிப்புற கலர் ஆப்ஷன்களில் ராயல் ப்ளூ (Royal Blue) மற்றும் டிராபிகல் மிஸ்ட் (Tropical Mist) ஆகியவை அடங்கும்.
காசிரங்கா மற்றும் டார்க் வெர்ஷன்களுடன் Harrier SUV-க்கான கலர் லிமிட் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய கலர்கள் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கலர் ஆப்ஷன்கள் மற்றும் இந்த எஸ்யூவி-யின் ஸ்பெஷல் எடிஷன் ஆகியவற்றுடன் விற்பனை செய்யப்படும்.
புதிய 2 கலர் ஆப்ஷனைகளை பற்றி பேசும் போது ராயல் ப்ளூ வெளிப்புற கலர் ஆப்ஷன் சிங்கிள்-டோன் வேரியன்ட்டில் கிடைக்கிறது. அதேசமயம் புதிய ட்ராபிகல் மிஸ்ட் கலர் ஆப்ஷன் XZS மற்றும் XZ+ ஆகிய டிரிம்களுக்கு கான்ட்ராஸ்ட்டிங் பிளாக் ரூஃப் பெறுகிறது. புதிய 2 கலர் ஆப்ஷன்களுடன் டாடா ஹாரியர் இப்போது Orcus White, Calypso Red மற்றும் Daytona Grey உள்ளிட்ட பல கூடுதல் கலர்களில் வருகிறது. இருப்பினும் Camo Green கலர் ஆப்ஷன் தற்காலிகமாக கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், டாடா ஹாரியர் காரின் விலையும் ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஹாரியர் எஸ்யூவி-யில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் இந்த புதிய 2 கலர் ஆப்ஷன்களில் வருகின்றன. டாடா ஹாரியர் 5-சீட்டர் எஸ்யூவி-யில் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் 2.0லி க்ரையோடெக் டீசல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 3,750 ஆர்பிஎம்-ல் 167.67 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்-ல் 350 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. டாடா ஹாரியரின் எரிபொருள்-திறன் எண்ணிக்கை (fuel-efficiency figure) மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு 16.35 km/l ஆகவும், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு 14.6 km/l ஆகவும் உள்ளது.
டாடா ஹாரியர் கார் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய பெரிய 9-இன்ச் ஹர்மன் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஐஆர்ஏ கனெக்டட் கார் டெக்னாலஜி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (டிபிஎம்எஸ்), ஸ்மார்ட் கீலெஸ் என்ட்ரி, புஷ் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட மேலும் பல அம்சங்களையும் பெற்றுள்ளது. இதனிடையே Tropical Mist கலர் ஆப்ஷன் XZS மற்றும் XZ+ டிரிம் லெவல்களில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் Royal Blue கலர் ஆப்ஷன் XT+ டிரிம் லெவல்களில் இருந்து கிடைக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.