முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / Tata Motors | கார்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் படிவதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் எடுத்த சூப்பர் ஐடியா..

Tata Motors | கார்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் படிவதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் எடுத்த சூப்பர் ஐடியா..

டாடா பப்பில் ராப்

டாடா பப்பில் ராப்

இந்த காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இப்போது நெக்சான் மற்றும் ஹாரியர் மாடல்களில் காணலாம். அதே நேரத்தில் சுத்திகரிப்பு கருவிகளில் கை சுத்திகரிப்பு, என் 95 தர முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு தொடு விசை, பேப்பர் டிஸ்ஸு பாக்ஸ் மற்றும் மிஸ்ட் டிஃப்பியூசர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதிலிருந்தது படிப்படியாக மீண்டு வரும் பல உற்பத்தியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று காலங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுத்திகரிப்பு, ஆன்லைன் கொள்முதல் மூலம் தொடர்பு இல்லாத விற்பனை போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கொரோனா காலத்தில் ஒரு புதிய அடியை நிறுவனங்கள் எடுத்து  வைத்துள்ளனர். 

இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில், டாடா மோட்டார்ஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மற்றொரு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என்று சொல்லலாம். உள்நாட்டு வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், காற்று நிரப்பப்பட்ட ஒரு பெரிய பிளாஸ்டிக் பைக்குள் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட புதிய கார்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றனர். இந்த பாதுகாப்பு முறையை அவர்கள் "சேஃப்டி பப்பிள்ஸ் (Safety Bubbles)" என்று அழைக்கின்றனர். தங்களது இந்த தனித்துவமான பாதுகாப்பு அமைப்பில் டாடா மோட்டார்ஸ் கார்கள் மற்றும் எஸ்யூவிகளை ஏற்கனவே டெலிவரி செய்ய தொடங்கியுள்ளனர்.  

புதிதாக சேர்க்கப்பட்ட இந்த அம்சம், பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து காரைக் காப்பதற்கான கூடுதல் அம்சமாகும். புதிய அம்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட காரின் படங்கள் மற்றும் வீடியோ கிளிப்களை மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பகிர்ந்து கொண்டது. மேலும் அந்த ட்வீட்டில், எங்கள் புதிய கார்கள் கிருமிகளிலிருந்து பாதுகாக்கப்படுவதால் அவற்றை நீங்கள் வாங்கும் வரை ஷோரூம்களில் பாதுகாப்பாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

புதிய சேஃப்டி பப்பிள்ஸ் என்பது அடிப்படையில் ஒரு பிளாஸ்டிக் வகையாகும். இது விநியோகத்தின் போது உடல் தொடர்பைக் குறைக்க வாகனத்தைச் சுற்றி மூடப்பட்டிருக்கும். மேலும் வெளியில் இருந்தபடி காரை மிகத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாடா மோட்டார்ஸ் எடுத்த இந்த முன்முயற்சியால் சுத்திகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் கீழ் தற்போது சேர்ந்துள்ளது. 

டாடாவின் சேஃப்டி பப்பிள்ஸ் வரும் நாட்களில் அனைத்து டாடா டீலர்ஷிப்களிலும் காணப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த படங்களில் ஒரு புதிய டாடா டியாகோ ஹேட்ச்பேக் சேஃப்டி பப்பிள்ஸின்  வெளிப்படையான பிளாஸ்டிக் விதானத்தின் மறைப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இது எல்லா பக்கங்களிலிருந்தும் மூடப்பட்டு ஒரு ஷோரூமிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. 

தற்போது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மற்ற சில முயற்சிகளையும் எடுத்துள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் கார் தயாரிப்பாளர் தங்களது வாடிக்கையாளர்களுக்காக தூய்மையான சுகாதார பாகங்களை ஏராளமாக அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் தயாரிப்புகளில் காற்று சுத்திகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். 

Also read... இந்தியாவின் சிறந்த கார் தயாரிப்பாளர்களில் டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடம்..

இந்த காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இப்போது நெக்சான் மற்றும் ஹாரியர் மாடல்களில் காணலாம். அதே நேரத்தில் சுத்திகரிப்பு கருவிகளில் கை சுத்திகரிப்பு, என் 95 தர முகக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்பு தொடு விசை, பேப்பர் டிஸ்ஸு பாக்ஸ் மற்றும் மிஸ்ட் டிஃப்பியூசர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. எல்லா நேரங்களிலும் அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் தற்போது இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

First published:

Tags: Tata motors