சரிந்த விற்பனையால் 3,679 கோடி ரூபாய் நஷ்டம் - வருத்தத்தில் டாடா மோட்டார்ஸ்

(மாதிரிப்படம்)

விரைவில் சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல்ஸ் சந்தை மீளும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவிலும் சீனாவிலும் சரிந்த விற்பனையால் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 3,679.66 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

ஆட்டொமொபைல் சந்தையில் தொடர்ந்து நீடிக்கும் மந்தநிலையால் விற்பனை பாதிப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த நிதிஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 66,701.05 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், அடுத்த நிதியாண்டில் இந்த வருவாய் வீழ்ந்து 61,466.99 கோடி ரூபாயாக இருந்தது.

டாடா மட்டுமல்லாது சர்வதேச ஜாம்பவானான ஜாகுவார் லேண்ட் ரோவரும் இந்த நிதியாண்டில் 395 மில்லியன் பவுண்டுகள் நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் விற்பனை விகித அறிக்கையின்படி இரண்டாம் காலாண்டில் விற்பனை 22.7 சதவிகிதம் வீழ்ந்துள்ளது. அதிகப்படியாக சீனாவிலும் இந்தியாவிலும்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும், இவ்விரு நாடுகளிலும் போட்டி அதிகரித்து இருப்பதும் டாடாவின் வீழ்ச்சியாக அமைந்துவிட்டது என டாடா மோட்டார்ஸ் தலைவர்களுள் ஒருவரான பாலாஜி தெரிவித்துள்ளார். விரைவில் சர்வதேச அளவிலான ஆட்டோமொபைல்ஸ் சந்தை மீளும் என கார் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன.

மேலும் பார்க்க: அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் 2020-ல் வெளியாகும் புதிய மஹிந்திரா பொலிரோ+
Published by:Rahini M
First published: