• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்களுக்கான வாரண்ட்டி, இலவச சேவையை நீட்டித்த டாட்டா மோட்டார்ஸ்

கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்களுக்கான வாரண்ட்டி, இலவச சேவையை நீட்டித்த டாட்டா மோட்டார்ஸ்

டாட்டா மோட்டர்ஸ்

டாட்டா மோட்டர்ஸ்

ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதி வரை காலாவதியாகும் வாடிக்கையாளர்கள் வாகனத்தின் வாரண்ட்டி மற்றும் இலவச சேவை காலத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

  • Share this:
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகளில் அதிக அளவில் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பல வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை பராமரிப்பதற்கான திட்டமிடப்பட்ட சேவைகளை பெறுவதில் சிரமப்பட்டு வருகின்றனர். அதற்காக, இந்த வருடம் ஏப்ரல் 1 முதல் மே 31ம் தேதி வரை காலாவதியாகும் வாடிக்கையாளர்கள் வாகனத்தின் வாரண்ட்டி மற்றும் இலவச சேவை காலத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து PVBU டாடா மோட்டார்ஸின் வாடிக்கையாளர் பராமரிப்பு தலைமை டிம்பிள் மேத்தா கூறுகையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக வாகனச் செயல்பாடு மிகவும் குறைந்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை திட்டமிடப்பட்ட பராமரிப்பு செய்யவும் பழுதுபார்கவும் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களுக்கு கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, தற்போதுள்ள ஊரடங்கின் போது கொள்கை விதிமுறைகளின்படி உத்தரவாதமும் இலவச சேவை காலங்களும் காலாவதியாகிவிடும்.

இந்த நேரத்தில் சேவைகளை வழங்க எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும் அவர்களின் வாரண்ட்டியையும் இலவச சேவை காலத்தையும் 2021 ஜூன் 30 வரை நீட்டிப்பதன் மூலம் இந்த கடினமான காலங்களில் அவர்களுக்கு எங்கள் முடிந்த ஆதரவை வழங்குகிறோம். இந்த முயற்சியின் மூலம் நாங்கள் வாடிக்கையாளர்களுடன் எங்கள் பிராண்ட் இணைப்பை மேம்படுத்துகிறோம். மேலும் அவர்களுக்கு தொந்தரவு இல்லாத உரிமையாளர் அனுபவத்தை வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது வணிகத்தின் நல்வாழ்வு மற்றும் துணை சுற்றுச்சூழல் அமைப்பிற்காக, டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சப்ளையர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் சேவை செய்வதற்கும் ஒரு விரிவான ‘வணிக சுறுசுறுப்புத் திட்டத்தை’ இயக்குவதாக அறிவித்திருந்தது. டாடா மோட்டார்ஸ் பல ஆண்டுகளாக தனது சேவை தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. இன்று நாட்டில் 400+ க்கும் மேற்பட்ட இடங்களில் 608க்கும் மேற்பட்ட சேவை மையங்களைக் நிறுவனம் வைத்துள்ளது. ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில், டாடா கார் உரிமையாளர்கள் 24x7 உதவி குழுவை தொடர்பு கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,48,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,33,40,938 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,197 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,93,82,642 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3,55,338 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: