வாடிக்கையாளர்களுக்கு கார் கடன்களை வழங்க டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனங்கள் லிமிட்டெட் (Tata Motors Passenger Vehicles Ltd )நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாக பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank) அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களில் இந்தியாவில் முதலிடத்திலும், பயணிகள் வாகனச் சந்தையில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் லிமிட்டெட் நிறுவனம் கார்கள், பயன்பாட்டு வாகனங்கள், பிக்-அப்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் ஆகியவற்றின் உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.
சர்வதேச அளவில் டாடா நிறுவனம் தயாரிக்கும் வர்த்தக மற்றும் பயணிகள் வாகனங்கள் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிஐஎஸ் மற்றும் ரஷ்யா முழுவதும் பரவியுள்ள நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் Tata Motors நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள Indian Bank, வங்கியின் 5,700 கிளைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட கார் கடன்களை வழங்குவதை இந்த நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளது.
இதனைப் பற்றி இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமீன் சித்திக், டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனங்கள் லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைவதன் மூலம் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான மற்றும் எளிதான கார் நிதி விருப்பங்களை வழங்குகிறோம். டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களுக்கு கார் ஃபினான்சிங் (car financing) அனுபவத்தை மிகவும் வசதியாக மாற்ற மற்றும் சிறந்த சேவைகளை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இந்தியன் வங்கி இப்போது நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட டச் புள்ளிகளைக் கொண்ட 310 டாடா மோட்டார்ஸ் டீலர்கள் மூலம் திரட்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு எளிதான நிதியுதவியை வழங்க முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகனங்கள் லிமிட்டெட் சீனியர் ஜென்ரல் மேலாளர் ரமேஷ் துரைராஜன் இதனைப் பற்றிக் கூறுகையில், "இந்தியன் வங்கியுடனான இந்த இணைப்பு மூலம், எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தையும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட EMI ஆப்ஷன்களையும் பெறுவார்கள். டாடா மோட்டார்ஸ் EV செக்மென்ட்டில் ஆரம்பக்கால நகர்வு நிறுவனமாக உள்ளது. ரூ.12.4 லட்சம் ஆரம்ப விலையில் தற்போது மூன்று மாடல்கள் விற்பனைக்கு உள்ளன" என்று கூறி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Bank, Tata motors