Home /News /automobile /

VRL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து பல்க் ஆர்டரை பெற்ற டாடா மோட்டார்ஸ்!

VRL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து பல்க் ஆர்டரை பெற்ற டாடா மோட்டார்ஸ்!

டாடா

டாடா

விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் (VRL Logistics) நிறுவனத்திடம் இருந்து 1,300 வணிக வாகனங்களுக்கான (commercial vehicles) ஆர்டரை பெற்று உள்ளதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் சமீபத்தில் தகவல் தெரிவித்து உள்ளது.

விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் (VRL Logistics) நிறுவனத்திடம் இருந்து 1,300 வணிக வாகனங்களுக்கான (commercial vehicles) ஆர்டரை பெற்று உள்ளதாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் சமீபத்தில் தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த ஆர்டர் VRL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையில், மீடியம் மற்றும் ஹெவி கமர்ஷியல் வாகனங்களுக்கான மற்றும் இன்டர்மீடியேட் & லைட் கமர்ஷியல் வாகனங்களுக்கான ரேஞ்சை கொண்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது. இந்த வாகனங்கள் சிறந்த டிரைவிங் திறன், அதிக எரிபொருள் திறன் மற்றும் குறைந்த மொத்த உரிமை செலவு (low total cost of ownership) உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை VRL லாஜிஸ்டிக்ஸின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின் அடிப்படையில் பார்த்தால் டாடா மோட்டார்ஸின் அனைத்து வகையான வணிக வாகனங்களும் இந்த ஆர்டரில் அடங்கி இருப்பதாக தெரிகிறது.

VRL இந்தியாவின் சர்ஃபேஸ் லாஜிஸ்டிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். கர்நாடகாவின் ஹூப்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் VRL இந்தியாவின் மிகப்பெரிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் VRL Logistics செயல்படுகிறது மற்றும் சுமார் 4,360 ட்ரான்ஸ்போர்ட் வாகனங்களை இயக்குகிறது. இவற்றில் 419 டூரிஸ்ட் பஸ்கள் மற்றும் 3,941 சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஆகும். இப்போது VRL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமானது மேலும் 1,300 வாகனங்களை அதன் செயல்பாடுகளில் சேர்க்க உள்ளது. இந்த விரிவாக்கத்திற்காகவே டாடா மோட்டார்ஸிடம் தற்போது பெரிய ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே சமீபத்திய காலங்களில் டாடா மோட்டார்ஸ் பெற்ற மிகப்பெரிய ஆர்டராகும். மேலும் இது வரும் வாரங்களில் டாடா மோட்டார்ஸின் உற்பத்தி எண்ணிக்கையை கணிசமான அதிகரிக்கும். இதனிடையே டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன வணிக பிரிவு துணைத் தலைவரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியுமான ராஜேஷ் கவுல் பேசுகையில், எங்கள் வாகனங்களை மிகக் குறைந்த மொத்த உரிமை செலவில் (lowest total cost of ownership) வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எங்கள் பரந்த சேவை நெட்வொர்க் நாட்டின் அனைத்து மூலைகளிலும் சிறந்த சேவை மற்றும் ஆதரவை உறுதி செய்யும். VRL லாஜிஸ்டிக்ஸின் தடையற்ற செயல்பாடுகளுக்கு சிறந்த ஆதரவை வழங்குவோம் என்றார்.

Also read... ‘இந்தியாவிலும் இனி பறக்கும் கார்’... பிரபல ஜப்பான் நிறுவனத்துடன் சுசூகி போட்ட ஒப்பந்தம்!

தங்கள் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் 'பவர் ஆஃப் 6' தத்துவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறி உள்ளது. Power of 6 ஃபிலாசப்பியில் மேம்படுத்தப்பட்ட செயல்திறனின் சக்தி, மொத்த செயல்பாட்டு செலவு, வசதி, தேர்வு, கனெக்டிவிட்டி, முழுமையான மன அமைதி உள்ளிட்டவை அடக்கம். பவர் ஆஃப் 6 தத்துவத்தின் ஒரு பகுதியாக, டாடாவின் வணிக வாகனங்கள் அதன் பயன்பாட்டினை அதிகரிக்க உதவும் பல தொழில்நுட்பங்களுடன் வருவது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Tata motors

அடுத்த செய்தி