Home /News /automobile /

நாட்டின் மிகப்பெரும் வாகன ஒப்பந்த ’ஜாக்பாட்’- கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்

நாட்டின் மிகப்பெரும் வாகன ஒப்பந்த ’ஜாக்பாட்’- கைப்பற்றியது டாடா மோட்டார்ஸ்

டாடா எலெக்ட்ரிக் பேருந்து (மாதிரிப்படம்)

டாடா எலெக்ட்ரிக் பேருந்து (மாதிரிப்படம்)

அரசின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதும் டாடாவுக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்பாக அமைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் ஜாம்பவான் ஆன டாடா மோட்டார்ஸ் நாட்டின் மிகப்பெரும் எலெக்ட்ரிக் பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க அரசு பெருமளவு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் 60 சதவிகித எலெக்ட்ரிக் பேருந்துகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினுடையது. இந்நிலையில் தற்போது அஹமதாபாத் நகருக்கு 300 எலெக்ட்ரிக் பேருந்துகள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இது மிகப்பெரும் ஆர்டர் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசின் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதும் டாடாவுக்கு பெரும் வளர்ச்சி வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் கட்டுமானப் பணிகளில் டாடா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அல்ட்ரா எலெக்ட்ரிக் பேருந்துகளாக இவை வெளியாகும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வணிக வாகனப் பிரிவின் தலைவர் கிரிஷ் வாக் கூறுகையில், “அரசின் எலெக்ட்ரிக் ஊக்குவிப்புக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். எலெக்ட்ரிக் மயமாக்கலுக்கு டாடாவின் பங்கு மிகப்பெரியது. ஹைப்ரிட் மட்டுமல்லாது முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.

மேலும் பார்க்க: ஒரே நாளில் ₹30 கோடிக்கு வாகனங்களை வாங்கிய ஊர்..!- உற்சாகத்தில் துள்ளிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

எரிபொருளுக்கு பதில் தண்ணீரை நிரப்பி மோசடி!
Published by:Rahini M
First published:

Tags: Electric Buses

அடுத்த செய்தி