Home /News /automobile /

குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்! செப்டம்பர் முதல் அமல்..!

குறிப்பிட்ட வாகனங்களின் விலையை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்! செப்டம்பர் முதல் அமல்..!

டாடா அதன் மொத்த விற்பனை அளவில் Nexon EV க்கு 5% பங்கு வளர்ச்சியைக் காணும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.

டாடா அதன் மொத்த விற்பனை அளவில் Nexon EV க்கு 5% பங்கு வளர்ச்சியைக் காணும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.

டாடா அதன் மொத்த விற்பனை அளவில் Nexon EV க்கு 5% பங்கு வளர்ச்சியைக் காணும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் முதல் சில குறிப்பிடத்தக்க பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. வாகனங்களின் வேரியண்ட் மற்றும் மாடலைப் பொறுத்து விலை உயர்வு சராசரியாக 0.8%-ஆக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை. சுவாரஸ்யமாக, டாடா மோட்டார்ஸின் விலை அறிவிப்பில் சராசரி சதவிகிதம் கொண்ட விலை அதிகரிப்பு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதையும், அது எந்த மாடல்களுக்கு பொருந்தும் என்பது பற்றிய முழுமையான விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை.

சமீபத்தில், வெளியான டாடா நெக்ஸானின் EV வேரியண்ட் வாகனத்தின் தேவை, நெக்ஸான் டீசல் வேரியண்ட்டைப் போல அதிகம் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. டாடா வாகனம் டீசல், பெட்ரோல் மற்றும் EV ஆகிய மூன்று எஞ்சின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. அதிலும் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனமாக டாடா நெக்ஸான் EV விளங்குகிறது.

Must Read | வொர்க் ஃப்ரம் ஹோமிற்கு விரைவில் ‘குட்பை’… கூகுள் ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை அனுப்பிய இ-மெயில்

இது தொடர்பாக இந்திய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரி பிபி பாலாஜி கூறுகையில் "நெக்ஸான் மாடலின் டீசல் வேரியண்ட்டோடு ஒப்பிடுகையில், நெக்ஸான் EV வேரியண்ட்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முன்பதிவுகளைப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும் மானியங்கள் மற்றும் FAME-II நன்மைகளின் சேர்க்கை தான் வாகனத்தின் தேவை அதிகரிப்பதற்கு வழிவகுத்தது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

டாடா அதன் மொத்த விற்பனை அளவில் Nexon EV க்கு 5% பங்கு வளர்ச்சியைக் காணும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, நெக்ஸான் EV இன் 650 யூனிட்கள் ஜூலை 2021 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, ​​மின்சார வாகனப் பிரிவில் நெக்ஸான் ஈவி 71% விற்பனை பங்கைக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் 1,716 யூனிட்களின் விற்பனையை பதிவு செய்துள்ளது. SUV இன் EV பதிப்பு ஸ்போர்ட்ஸ் மற்றும் சாதாரண ஓட்டுநர் மோட்களுடன் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது, "வாடிக்கையாளர்கள் மீதான எங்கள் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸின் புதிய ஃபாரெவர் ரேஞ்சில் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒப்புக் கொண்டு, நிறுவனம் 2021 ஆகஸ்ட் 31 அல்லது அதற்கு முன் சில்லறை விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு விலை உயர்வில் இருந்து விலக்கு அளிக்கும்" என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெக்ஸான் EV வாகனத்தின் அம்சங்களை பொறுத்தவரை, 127 பிஎஸ் மற்றும் 245 என்எம் வெளிப்படுத்தும் அதிகப்பட்ச டார்க் திறனின் சக்தியை ஒரு காந்தம் டிசி மோட்டாரிலிருந்து ஈர்க்கிறது. மேலும், இயந்திரம் 30.2 kWh, உயர் மின்னழுத்தம், லித்தியம் அயன் பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 0-100 மைல் வேகத்தில் 9.9 வினாடிகளில் செல்லக்கூடிய காரின் விலை ரூ. 13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV இன் டார்க் எடிஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published:

Tags: Automobile, Tata motors

அடுத்த செய்தி