குறிப்பிட்ட வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் வரை ஆஃபர்! டாடா மோட்டார்ஸ் அதிரடி

ஹாரியர், நெக்ஸான் ஈ.வி., டியாகோ மற்றும் டிகோர் உள்ளிட்ட பிராண்டின் வாகனங்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம்.

ஹாரியர், நெக்ஸான் ஈ.வி., டியாகோ மற்றும் டிகோர் உள்ளிட்ட பிராண்டின் வாகனங்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம்.

  • Share this:
இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தங்களது நிறுவனத்தின் குறிப்பிட்ட வாகனங்களுக்கு பலவிதமான தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த குறிப்பிட்ட வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள், ரொக்க தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் கிடைக்கும். சலுகை இந்த மாத இறுதி வரை (ஜூன் 30) மட்டுமே நீடிக்கும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஹாரியர், நெக்ஸான் ஈ.வி., டியாகோ மற்றும் டிகோர் உள்ளிட்ட பிராண்டின் வாகனங்களை வாங்க ஆர்வமுள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லலாம். ஆனால் சஃபாரி மற்றும் அல்ட்ரோஸில் எந்த தள்ளுபடியும் அறிவிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தள்ளுபடிகள் தொடர்பான முழு விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் விற்பனையாளர்களிடமிருந்து பெறலாம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் எந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதையும் பின்வருமாறு நாம் காணலாம்.

டாடா நெக்ஸான்: (Tata Nexon)

இந்த வாகனத்தின் டீசல் வகைகள் ரூ.15,000 என்ற பரிமாற்ற போனஸுடன் கிடைக்கின்றன.

டாடா டியாகோ: (Tata Tiago)

இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் இந்த வாகனத்திற்கு ஜூன் 30ஆம் தேதி வரை ரூ.15,000 ரொக்க தள்ளுபடியும், ரூ.10,000 பரிமாற்ற போனஸும் அறிவித்துள்ளது.

டாடா ஹாரியர்: (Tata Harrier)

இக்காரின் டார்க் வெர்சன் மற்றும் கேமோ மாடல்களை ரூ.40,000 என்ற பரிமாற்ற போனஸுடன் வாங்கலாம். எஸ்யூவியின் மற்ற அனைத்து டிரிம்களும் ரூ.25,000 ரொக்க தள்ளுபடியுடனும் ரூ .40,000 பரிமாற்ற போனஸுடன் வருகின்றன.

டாடா நெக்ஸன் ஈ.வி.: (Tata Nexon EV)

எலக்ட்ரிக் வாகனம் ரூ .15,000 வரை பரிமாற்ற போனஸுடன் கிடைக்கிறது.

டாடா டிகோர்: (Tata Tigor)

டாடா டிகோரில் ரூ.15,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.15,000 பரிமாற்ற போனஸ் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாடா மோட்டர்ஸ் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள டாடா ஆல்ட்ரோஸ் ஈ.வி. ஐபி 67 சான்றிதழோடு லித்தியம் அயன் பேட்டரியை பெறும். இந்த வாகனம் முதன்முதலில் 2019 இல் நடைபெற்ற ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Archana R
First published: