வாகனங்களுக்கு இலவச மழைக்கால பரிசோதனை - டாடா மோட்டார்ஸ் சலுகை

(மாதிரிப்படம்)

கூடுதலாக, புதிய கார் கண்காட்சி, எக்ஸ்சேஞ்ச் மேலா மற்றும் பழைய கார் மதிப்பிடல் சேவைகளும் நடைபெறுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாடு முழுவதும் வாகனங்களுக்கு இலவசமாக மழைக்கால பரிசோதனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

ஜூலை 15-ம் தேதி தொடங்கிய இலவச வாகன பரிசோதனை முகாம் ஜூலை 25-ம் வரையில் நடைபெறுகிறது. இலவச வாகன பரிசோதனை மட்டுமல்லாமல் சில அதிரடி சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் மேலாளர் சுபஜித் ராய் கூறுகையில், “டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வளர்ந்ததற்கான காரணமே வாடிக்கையாளர்கள்தான். வளர்ந்து வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களுக்கான சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம்.

கால நேரத்துக்கு ஏற்ப தற்போது டாடா மோட்டார்ஸ் வாகனங்களுக்கு நாடு முழுவதும் உள்ள டீலர்களிடம் இலவச மழைக்கால வாகன பரிசோதனையை வாடிக்கையாளர்கள் செய்துகொள்ளலாம். விற்பனைக்குப் பின்னரும் வாடிக்கையாளர்களுக்கான சேவையைத் தொடரவே இந்த சலுகை அளிக்கப்படுகிறது” என்றார்.

வாகன பரிசோதனை மட்டுமல்லாது சாலையோர சேவை, உதிரி பாகங்கள், ஆயில் நிரப்புதல் அல்லது மாற்றுதல் ஆகிய இதர சேவைகளும் வழங்கப்படுகிறது. மழைக்கால வாகன பரிசோதனை முகாமுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் இதர சேவைகள் செய்யப்படுகிறது. கூடுதலாக, புதிய கார் கண்காட்சி, எக்ஸ்சேஞ்ச் மேலா மற்றும் பழைய கார் மதிப்பிடல் சேவைகளும் நடைபெறுகிறது.

மேலும் பார்க்க: ஜாவா மோட்டார் சைக்கிள் புக் செய்திருக்கிறீர்களா...? இன்னும் 10 மாசம் காத்திருக்கணும்!
Published by:Rahini M
First published: