Home /News /automobile /

கார்களுக்கு ஆண்டு இறுதி ஆஃபர்களை அறிவித்த டாடா மோட்டார்ஸ்!

கார்களுக்கு ஆண்டு இறுதி ஆஃபர்களை அறிவித்த டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டர்ஸ்

டாடா மோட்டர்ஸ்

இந்தியாவில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் மலிவு விலை வாகனம் என்றால் அது டாடா டியாகோ தான். இது தற்போது ரூ.10,000 என்ற ரொக்கப் பலனுடன் கிடைக்கிறது.

    இந்த ஆண்டிற்கான கடைசி மாதத்தில் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக, பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அதன்படி டாடா மோட்டார்ஸ் இந்த மாதம் முழுவதும் தங்கள் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது.

    டாடா நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும் ரொக்கத் தள்ளுபடிகள், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ்களை வழங்குகிறது. இந்த தள்ளுபடிகள் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், டீலர்ஷிப்கள் வரிசை முழுவதும் வழங்கப்படும் சலுகைகளைப் பகிர்ந்துள்ளன.

    டாடா டியாகோ (Tata Tiago):

    இந்தியாவில் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் மலிவு விலை வாகனம் என்றால் அது டாடா டியாகோ தான். இது தற்போது ரூ.10,000 என்ற ரொக்கப் பலனுடன் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ. 15,000 கிடைக்கும். கூடுதலாக ரூ.5,000 கார்ப்பரேட் தள்ளுபடியும் இதனுடன் கிடைக்கிறது. இருப்பினும், Tiago NRG இல் எந்த தள்ளுபடியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    டாடா டைகர் (Tata Tigor):

    Tigor EVக்கு எந்தவிதமான தள்ளுபடிகளும் வழங்கப்படவில்லை என்றாலும், அதன் ICE வெர்ஷன் ரூ.10,000 ரொக்க தள்ளுபடியுடன் வருகிறது. மேலும் இந்த வாகனத்தை வாங்குபவர்கள் ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும், மற்றும் ரூ.10,000 கார்ப்பரேட் தள்ளுபடியையும் பெறலாம்.

    டாடா நெக்ஸான் (Tata Nexon):

    நிறுவனத்தின் சப்-4m காம்பாக்ட் SUV இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் வாகன மாடல்களில் ஒன்றாகும். இந்த வாகனம் தற்போது ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் கிடைக்கிறது. மேலும் இந்த தள்ளுபடிகள் டீசல் மற்றும் மின்சார வகை வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். மறுபுறம், பெட்ரோல் வகைகள் ரூ.10,000 என்ற கார்ப்பரேட் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

    Also Read : டிசம்பரில் அறிமுகமாகும் புதிய பைக்குகள்.. KTM RC390 முதல் ஹார்லியின் Sportster S வரை..

    டாடா ஹாரியர் (Tata Harrier):

    ஹாரியரை இப்போது நீங்கள் ரூ.40,000 என்ற எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் பெறலாம். இருப்பினும், இந்த வாகனத்தின் டார்க் வெர்ஷனுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். கூடுதலாக, ஹாரியர் வாகனத்தை வாங்குபவர்கள் ரூ. 25,000 கார்ப்பரேட் சலுகையை பெறலாம்.

    டாடா சஃபாரி (Tata Safari)

    உள்நாட்டு பிராண்டின் முதன்மையான பிராண்டான சஃபாரியை இந்த மாதம், ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் வாங்கலாம். அவை பரிமாற்ற போனஸ் வடிவத்தில் கிடைக்கும். கோல்ட் எடிஷன் வகைகளைத் தவிர, அனைத்து டிரிம் வாகனங்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்.

    இதுதவிர, டாடா நிறுவனத்தின் பிற வாகனங்களான டிகோர் EV, பஞ்ச், அல்ட்ரோஸ் மற்றும் டியாகோ NRG ஆகியவற்றிற்கு டாடா நிறுவனம் எந்த வித தள்ளுபடிகளையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Tata motors

    அடுத்த செய்தி