இந்தியாவின் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்! - டாடா முன்னெடுப்பு

அடுத்த இரண்டு மாதங்களில் இதர நகரங்களுக்கும் சேர்த்து 45 சார்ஜிங் நிலையங்களை அமைக்க குறிக்கோள் வைத்துள்ளது டாடா.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்கள்! - டாடா முன்னெடுப்பு
மாதிரிப்படம்
  • Share this:
நாடு முழுவதும் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் 300 எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியை டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் இணைந்து முன்னெடுத்துள்ளது.

2019-20 நிதியாண்டின் இறுதிக்குள் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து நகரங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான அதிவிரைவு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாக பூனே நகரில் டாடா 7 சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இதர நகரங்களுக்கும் சேர்த்து 45 சார்ஜிங் நிலையங்களை அமைக்க குறிக்கோள் வைத்துள்ளது டாடா.


டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் இடங்கள், டாடா குழுமத்தின் கிளைகள் மற்றும் முக்கியப் பொது இடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கும் அமைதியைத் தர இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக டாடா குழுமத்தின் தலைவர் ப்ரவீன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க: மாருதி சுசூகியை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த ஹூண்டாய்..!

Watch Also:
First published: August 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்