Home /News /automobile /

Ford தொழிற்சாலையில் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.. டாடா மோட்டார்ஸ் இலக்கு!

Ford தொழிற்சாலையில் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.. டாடா மோட்டார்ஸ் இலக்கு!

TATA Motors

TATA Motors

TATA Motors | டாடா நிறுவனத்திற்கு சொந்தமாக சனாந்த் பகுதியில் உள்ள நானோ உற்பத்தி ஆலையில் ஏற்கனவே ஒரு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபோர்டு தொழிற்சாலையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலமாக ஆண்டுக்கு இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
குஜராத் மாநிலம், காந்திநகர் அருகே சனாந்த் என்ற பகுதியில், ஃபோர்டு இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான பாசஞ்சர் கார் உற்பத்தி ஆலையை விலைக்கு வாங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. என்ன விலைக்கு இந்த விற்பனை நடைபெறுகிறது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அதே சமயம், ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையில் கூடுதலாக ரூ.2,000 கோடி முதலீடு செய்யவும், 2026ஆம் ஆண்டிற்குள் 2 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யவும் டாடா நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையில் ஏற்கனவே பணியாற்றி வரும் தொழிலாளர்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தப் போவதில்லை என்று குஜராத் மாநில அரசிடம் டாடா நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சலுகைகள் தொடர வேண்டும் என டாடா கோரிக்கை :

டாடா நிறுவனம் ஃபோர்டு தொழிற்சாலையை வாங்குகின்ற நிலையில், அந்நிறுவனத்திற்கு 2030ஆம் ஆண்டு வரையில் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்ட ஊக்கத் தொகைகள் அப்படியே தொடர வேண்டும் என்று டாடா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்து நிலப் பரிமாற்றம் செய்யும்போது கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று டாடா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் குஜராத் அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஏற்கனவே ஒரு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி:

டாடா நிறுவனத்திற்கு சொந்தமாக சனாந்த் பகுதியில் உள்ள நானோ உற்பத்தி ஆலையில் ஏற்கனவே ஒரு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஃபோர்டு தொழிற்சாலையில் ரூ.2,000 கோடி முதலீடு செய்வதன் மூலமாக ஆண்டுக்கு இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Also Read : இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கு குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் வாங்க விருப்பமா - இதோ விவரம்!

23,000 பேருக்கு வேலைவாய்ப்பு :

ஃபோர்டு நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்கள் அப்படியே தொடருவார்கள் எனக் கூறப்படும் நிலையில், இந்த தொழிற்சாலை மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 23,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் உரிமையை பரிமாற்றம் செய்வது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகளும், டாடா நிறுவனத்தின் அதிகாரிகளும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்நிலையில், இரு நிறுவனங்களையும் உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் அண்மையில் சந்தித்து, நிறுவனத்தை கைமாற்றுவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தனர்.

Also Read : எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கட்டுக்கதைகளும்..உண்மைகளும்!

உற்பத்தி திறன் எவ்வளவு :

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தங்களது தொழிற்சாலையில் ரூ.4,500 கோடி முதலீடு செய்திருந்தது. ஆண்டுக்கு மொத்தம் 2.4 லட்சம் வாகனங்களையும், 2.7 லட்சம் இன்ஜின்களையும் உற்பத்தி செய்யும் திறன் இந்த தொழிற்சாலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 2 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Ford, Tata motors

அடுத்த செய்தி