ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

Tata Motor டிரக் சக்தி வாய்ந்தது, பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.!

Tata Motor டிரக் சக்தி வாய்ந்தது, பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது.!

டாடா மோட்டார்

டாடா மோட்டார்

Tata Motor-இன் ட்ரக்குகளை வெவ்வேறு துறைகளில் அவற்றின் வசதி மற்றும் தேவைக்கேற்ப பபயன்படுத்தலாம். இவை பட்ஜெட் ஃப்ரெண்ட்லி என்பதுடன் பாதுகாப்பானவை மற்றும் வசதியான தேர்வாக இருப்பவை. 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Tata Motor-இன் ட்ரக்குகள் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதில் வெற்றியடைந்து வருபவை. இவை வலிமை, பாதுகாப்பு மற்றும் காலத்திற்கேற்ற சிறப்பான மற்றும் வசதிக்கு பெயர் பெற்றவை. சமீபத்தில், நிறுவனம் I & LCV/ ஐ மற்றும் எல்சிவி வகையில், சிறந்த தொழில்நுட்ப திறனுடைய 7 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், இந்த ட்ரக்குகளை வெவ்வேறு துறைகளில் அவற்றின் வசதி மற்றும் தேவைக்கேற்ப பபயன்படுத்தலாம். இவை பட்ஜெட் ஃப்ரெண்ட்லி என்பதுடன் பாதுகாப்பானவை மற்றும் வசதியான தேர்வாக இருப்பவை. 

  புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் சிறந்த பாதுகாப்பு ஃபீச்சர்கள்

  இந்த ட்ரக்குகள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன், 140க்கும் மேற்பட்ட மாடல்களுடன் வருவதால் மக்களின் விருப்பமாக இருப்பவை மற்றும் வாடிக்கையாளர்களிடையே உறுதியாக நம்பப்படுபவை. இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ட்ரக் ப்ளேட்ஃபார்ம்கள் Prima, Signa மற்றும் Ultra ஆகும். இந்த ட்ரக்குகள், பாதுகாப்பு அடிப்படையில் மிகவும் சிறந்தவை. அட்வான்ஸ்ட் ட்ரைவர் அஸிஸ்டெட் சிஸ்டம் (ADAS) பொருத்தப்பட்டவைப்ரீ-க்ரேஷ் சிஸ்டம். லேன் டிபார்சர்கான அறிவிப்பு போன்ற வசதிகள் மற்றும் ட்ரைவர்களுக்கான மானிடரிங் சிஸ்டம் ஆகியவைகள் கொண்டவை. அதனுடன், மொபிலிடி சிஸ்டம் மற்றும் பெட்ரோல்டீஸல் தேர்வுகளுடன் கூடிய பவர்ட்ரெயின்ஸ் போன்ற வசதிகள் உடையவை. இந்த ஃபீச்சர்ஸ் மற்றும் வசதிகள் ட்ரக் ட்ரைவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையின் மற்ற போக்குவரத்தையும் பாதுகாப்பவைகளாகும்

  எம் அண்ட் எம்சிவி/M & MCV மற்றும் ஐஎல்சிவி/ ILCV ரேஞ்சின் சிறப்பான வலிமையுடன் இணைந்த சௌகரியம்.

  எம் அண்ட் எம்சிவி/M & MCV மற்றும் ஐஎல்சிவி/ ILCV ரேஞ்ச்சின் சிறப்பு, வலிமையுடன் இணைந்த, ஃப்யூயல் எஃபிஷியன்சி/எரிபொருள் திறனாகும். அதனுடன் ஆன் சைட் சப்போர்ட் மற்றும் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட வசதியான ஃபீச்சர்கள், ப்ரேக்டவுண் வசதிகள் போன்ற சிறப்புகள், ட்ரக் ட்ரைவர்களுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துபவைகளாக இருக்கின்றன; அதைத் தவிர்த்து இன்ஷூரன்ஸ் மற்றும் ஆக்ஸிடெண்ட் சமய பழுது பார்ப்பு, ஆக்ஸிடெண்ட் வாரண்டி சேவைகளும் இவற்றை மக்களுக்கு விருப்பமானவைகளாக ஆக்க போதுமானவையாக உள்ளன. அதற்கும் மேலாக இவை வண்டியின் பராமரிப்பு மற்றும் லைஃப்ஸைகிள் மேனேஜ்மெண்ட்டுக்கும் பல்வேறு விதமான வசதிகள் கொண்டவைகளாகும்

  இந்த ட்ரக்குகள், வெவ்வேறு விதமான துறைகளில் உபயோகமாக இருப்பவை.

  எம் அண்ட் எம்சிவி/M & MCV மற்றும் ஐஎல்சிவி/ ILCV ரேஞ்ச் ட்ரக்கள் வெவ்வேறு இடங்களுக்கு ஏற்ப உபயோகமாகுபவை. இந்த ட்ரக்குகளை விவசாயம் முதல் பல்வேறு துறைகளில் உபயோகப்படுத்தலாம். வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இதன் பயன்பாடு, வணிகர்களுக்கு தகுந்ததாகவும், பிடித்தமானதாகவும் இருக்கிறது. இவைகள் விவசாயம், சிமெண்ட், அயர்ன் அண்ட் ஸ்டீல் கொண்டு செல்லவும் உபயோகப்படுகின்றன. மற்றும்,இவற்றை  கண்டெயினர், வெஹிகிள் கேரியர், பெட்ரோலியம், கெமிக்கல், தண்ணீர் டேங்கராகவும் உபயோகப்படுத்தலாம். எல்பிஜி, எஃப்எம்சிஜி, விவசாய உற்பத்திப் பொருட்கள் மற்றும் வயிட் குட்ஸ்/வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்து செல்வதற்கு, இந்த ட்ரக்குகள் சரியான தேர்வாகும். கன்ஸ்ட்ரக்ஷன், கனிமப் பொருட்கள் மற்றும் மாநகராட்சியின் தேவைகளுக்கேற்பவும் இந்த ட்ரக்குகளை உபயோகப்படுத்தலாம். வணிகர்கள் அல்லது சாதாரண ட்ரைவர்கள் தங்கள் சௌகரியம் மற்றும் தேவைக்கேற்ப வெவ்வேறு துறைகளுக்கு இந்த ட்ரக்குகளை உபயோகிக்கலாம்

  Tata ட்ரக் ஐஎல்சிவி/ILCV செக்மெண்டில் புதிய ட்ரக்குகளின் அறிமுகத்தில் பல சிறப்பான ஃபீச்சர்கள் பார்க்கக் கிடைக்கும்சக்தி வாய்ந்த ஃபீச்சர்கள் இந்த ட்ரக்குகளை கூட்டத்திலிருந்து வேறுபடுத்தி காண்பிப்பது மட்டுமல்லாமல் உங்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது:

  • LPT 709g XD யுடன் 5 சதுர அடி டெக் ஏரியா மற்றும் 10% வரை அதிக ஃப்யூயல் எஃபிஷியன்ஸி 
  • SK 710 டிப்பர் – 4 மீ3 பாடி, நம்பகத்தன்மையுடைய SFC ப்ளேட்ஃபார்மின் மேல்
  • Ultra T.12g உடன் நம்பகத்தன்மையுடன் கூடிய 3.8 லிட்டர் SGI டர்போசார்ஜ்ட் எஞ்சின்
  • Ultra K.14 அதன் வகையில், கம்ஃபர்ட் அடிப்படையில் சிறந்த, ஏர்-கண்டிஷனர் கேபினுடன் எல்லாவற்றையும் விட 37% அதிக செயல்திறன்.
  • LPT 1512g யுடன் 10% வரை சிறந்த ஃப்யூயல் எஃபிஷியன்சி, அதற்கும் மேலாக, எல்லாவற்றையும் விட அதிகமான CNG கேபாசிடி/ கொள்ளளவு இதனை சிறந்த ட்ரக்காக ஆக்குவதற்கு போதுமானதாக உள்ளது.
  • Ultra T.16 Cx உடன் மக்கள் விரும்பும் 3.3 லிட்டர் இஞ்சின் மற்றும் வசதியான அல்ட்ரா கேபின்
  • LPK 610 உடன் அதிக க்ரௌண்ட் க்ளியரன்ஸ் மற்றும் H2LS ப்ரேக்குகள் உள்ளன. இதன் உதவியால் குறைந்த தூரத்தில் உள்ள நிறுத்தங்களில் நிறுத்த வசதியானவை மற்றும் பாதுகாப்பானவை

  CNG மைலில் கிடைக்கும் விசேஷ இயல்புகள்:

  • 1000 கிமீ வரை ட்ரைவிங் ரேஞ்ச்
  • கனெக்டிவிடிக்கான சிறந்த ஃபீச்சர்கள்
  • டெக் நீளத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பல தேர்வுகள்
  • 19 டன்- 20 அடி மற்றும் 32 அடி
  • 28 டன் – 24 அடி மற்றும் 32 அடி
  • ட்ரக்கில் இரு நிரப்பு குழாய்கள் உள்ளதால், குறைவான சமயத்தில் நிரப்ப இயலுபவை
  • இந்த செக்மென்ட்டில் குறைந்த விலையில், சிறந்த ஃப்யூயல் எஃபிஷியண்ட் கேஸ் எஞ்சின்
  • நியூ Prima மற்றும் நியூ Signaவின் ஃபீச்சர்கள்;
  • 7” அட்வான்ஸ்ட் HMI டச் ஸ்க்ரீன் இண்டிகெட்டருடன் அட்வான்ஸ்ட் கனெக்டிவிடி ஃபீச்சர்கள்
  • முற்றிலும் புதிதான இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்
  • சுலபமாக ஆக்ஸஸ் செய்யக் கூடிய ஸ்விட்ச் பேனல்
  • த்ரீ ஸ்ட்ரோக் ஸ்டியரிங் வீலுடன் மவுண்ட்டெட் கன்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிடி

  PROMOTED CONTENT

  Published by:Selvi M
  First published:

  Tags: Automobile, Tata motors