‘டாடா இன்டிகா’ கார் பிரியர்களுக்கு ஒரு சோகச் செய்தி

News18 Tamil
Updated: May 28, 2018, 4:25 PM IST
 ‘டாடா இன்டிகா’ கார் பிரியர்களுக்கு ஒரு சோகச் செய்தி
டாடா இன்டிகோ.
News18 Tamil
Updated: May 28, 2018, 4:25 PM IST
டாடா இன்டிகா கார் பிரியர்களுக்கு ஒரு சோகமான செய்தியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டாடா இன்டிகா மற்றும் இன்டிகா சிஎஸ் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி மும்பையில் டாடா இன்டிகா கார் அறிமுகப்படுத்தப்பட்டது. பஸ்களை தயாரித்து வந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முதலாக கார் உற்பத்தி தொழிலில் ஈடுபடத் தொடங்கி முதல் காராக டாடா இன்டிகாவை அறிமுகம் செய்தது. ஜென் மற்றும் ஹெச்எம் அம்பாசிடருக்கு போட்டியாக ஹேட்ச்பேக் மாடலில் டீசல் காரை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, இன்டிகோவை அறிமுகப்படுத்தினார். அப்போது டாடா இன்டிகா காரின் விலை ரூ. 3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து இன்று வரை விற்பனையில் மிகப் பெரிய சாதனையை படைத்து வருகிறது. வாடகை கார் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர குடும்பங்களிலும் முக்கிய அங்கமாக டாடா இன்டிகா இருந்து வந்தது. தற்போது இன்டிகா மற்றும் இன்டிகா சிஎஸ் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே டாடா சபாரி காரின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


அடுத்த ஆண்டில் புதிய எலெக்ட்ரிக் வகை கார்கள் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் புதிய தொழில்நுட்பத்தில் எஸ்யுவி கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதனால் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
First published: May 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...