• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ஹேரியர், சஃபாரியில் நியூ வேரியண்ட் - புது மாடல்களை களமிறக்கிய டாட்டா!

ஹேரியர், சஃபாரியில் நியூ வேரியண்ட் - புது மாடல்களை களமிறக்கிய டாட்டா!

சஃபாரியில் நியூ வேரியண்ட்

சஃபாரியில் நியூ வேரியண்ட்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

  • Share this:
எஸ்.யூ.வி மாடல்களில் டாட்டா நிறுவனம் சஃபாரி மற்றும் ஹேரியரில் புதிய வேரியண்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

கெரோனாவுக்குப் பிறகு நிலைமை சீரடைந்து வரும் நிலையில், சந்தையில் தங்களின் மார்க்கெட்டுகளை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் புதிய வேரியண்டுகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. டாட்டா நிறுவனம் ஹேரியர் மற்றும் சஃபாரியில் புதிய வேரியண்டுகளை தற்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டாட்டாவின் புதிய வேரியண்ட் கார்கள் XTA+ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட் கார்கள் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாடா ஹேரியர் XTA+ வேரியண்ட் கார்களுக்கு 19.14 லட்சம் ரூபாய் எக்ஸ் ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் டார்க் எடிசனை விரைவில் அறிமுகப்படுத்தும் டாட்டா, அதற்கு பிரீமியம் விலையாக 19.43 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வேரியண்டில் சஃபாரி XTA+ வேரியண்ட் 20.08 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சஃபாரியில் டார்க் எடிசன் இல்லை. புதிய வேரியண்டுகள் அறிமுகம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள டாட்டா நிறுவனம், 2022 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டின் முதல் குவார்ட்டரில் சஃபாரி மற்றும் ஹேரியர் வேரியண்டுகள் இணைந்து 41.2 விழுக்காடு சந்தை மதிப்பை பெற்றிருந்தாக தெரிவித்துள்ளது.

தற்போது, சஃபாரி மற்றும் ஹேரியரில் எக்ஸ்.டி.ஏ + வேரியண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால், இவற்றின் சந்தை மதிப்பு மேலும் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய XTA+ தேர்வில் டிசைன்களின் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்17 அலாய் வீல்கள், 7 இன்சிலான தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 8 ஸ்பீக்கர்கள் அடங்கிய ஆடியோ சிஸ்டம், புரொஜக்டர் ஹெட்லேம்ப், இரட்டைப் பயன்பாட்டு வசதிக் கண்ட எல்இடி பகல்நேர மின் விளக்கு உள்ளிட்டவை புதிய XTA+ தேர்வில் இடம் பெற்றிருக்கின்றன.

Also read... BMW-வின் முதல் முழு எலெக்ட்ரிக் பாதுகாப்பு கார் விற்பனைக்கு வருவது எப்போது?

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் சிறப்பு வசதியாக ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன், தானியங்கி ஹெட்லேம்ப், புஷ் ஸ்டார்ட் பட்டன், தானியங்கி டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல், மழை பொழிந்தால் தானாக இயங்கும் வைப்பர் என பல்வேறு பிரீமியம் வசதிகள் டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் வழங்கப்பட்டிருக்கின்றன.

காரின் முன் பக்கத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரு ஏர் பேக்குகள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா உள்ளிட்ட வழக்கமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இன்ஜினைப் பொறுத்த வரையில் டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி XTA +-ல் இரு கார் மாடல்களிலும் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கவர்ச்சி மற்றும் பிரிமியம் வசதிகளில் சற்றும் குறைவில்லாத வகையில் அனைத்து அம்சங்களும் இந்தக் காரில் இடம்பெற்றிருப்பதால், வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: