புதிய ’டார்க்’ பதிப்பாக டாடா ஹேரியர்... 14 வடிவமைப்பு மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகம்!

கறுப்பு நிற டாடா ஹேரியர்

அசத்தலான ஸ்டைலான ஹேரியர் டார்க் மிகவும் குறைந்த பதிப்புகளே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டாடா ஹேரியர் ‘டார்க்’ பதிப்பு 16.76 லட்சம் ரூபாய்க்கு இந்தியாவில் களம் இறக்கப்பட்டுள்ளது.

இரு நிற ஹேரியர் ரகங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது டார்க் நிற பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 14 வித வடிவமைப்பு மேம்பாடுகளுடன் இந்த டார்க் ஹேரியர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மொத்த உட்புறத் தோற்றமும் ப்ளாக்ஸ்டோன் தீம் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு கவர்கிறது.

ப்ளாக்ஸ்டோன் லெதர், ப்ளாக்ஸ்டோன் மேட்ரிக்ஸ் டேஷ் போர்டு, க்ரே நிற க்ரோம் பேக் என அசத்தும் உட்புறத் தோற்றத்துக்கு ஈடாக வெளிப்புறத்தில் அழகு சேர்க்கின்றன ப்ளாக்ஸ்டோன் அலாய் சக்கரங்கள். அசத்தலான ஸ்டைலான ஹேரியர் டார்க் மிகவும் குறைந்த பதிப்புகளே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனைப் பிரிவின் தலைவர் விவேக் கூறுகையில், “ஹேரியரின் ஸ்டைலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று பலரையும் கவர்வதற்காகவே ஹேரியர் சார்க் பதிப்பை குறைந்த எண்ணிக்கையில் வெளியிட்டுள்ளோம். எஸ்யூவி ரசிகர்களின் விருப்ப நிறமான கருப்பு நிறத்தில் வெளியிட்டிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுத் தருகிறது" என்றார்.

மேலும் பார்க்க: போக்குவரத்து விதிமீறலா?- செப்டம்பர் 1-ம் தேதி முதல் கடுமையாகும் சட்டம்!

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
Published by:Rahini M
First published: