டாடா குழுமத்தின் கீழ் ஏர் இந்தியா வந்த பிறகு வணிகத்தை வளர்ச்சி கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டாடா குழுமத்தின் தலைமையிலான ஏர் இந்தியா விரைவில் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான 500 ஜெட் லைனர் விமானங்களை ஆர்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய 2 நிறுவனங்களிடம் இதற்கான ஆர்டர்களை ஏர் இந்தியா அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கடும் போட்டிகளுக்கு மத்தியில் நிறுவனத்தை லாப பாதையில் கொண்டு செல்ல இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆர்டர்களை ஏர் இந்தியா செய்ய உள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பெருந்தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து விமான பயணிகள் மீண்டும் பழையபடி பயணத்தை தொடங்கினாலும், எப்போதும் அதிகரித்து வரும் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களை விமான தொழில் எதிர்கொண்டுள்ளது.இந்நிலையில் ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி புதிய ஆர்டர்களுக்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிகிறது.
மேலும் ஏர் இந்தியாவின் மொத்த ஆர்டரில் 400 நேரோ-பாடி ஜெட்ஸ் மற்றும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வைட்-பாடி ஜெட்ஸ்களும் அடங்கும். மேலும் இந்த ஆர்டரில்டஜன் கணக்கான Airbus A350 மற்றும் Boeing 787 மற்றும் Boeing 777 உள்ளிட்ட ஜெட்ஸ்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த ஆர்டரில் சம்பந்தப்பட்டுள்ள ஏர்பஸ், போயிங் மற்றும் டாடா குரூப் உட்பட எந்த நிறுவனமும் இதுபற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.
Read More : 822 சிசி கொண்ட இந்தியன் மேட் பைக் வேணுமா? - வெளியான அசத்தல் அறிவிப்பு
மேலும் இந்த ஒப்பந்தம் சமீப காலங்களில் காணப்பட்ட மிகப் பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக இருப்பதால் மிகப்பெரிய இந்த ஆர்டரின் மொத்த மதிப்பு $100 பில்லியனை தாண்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் 460 ஏர்பஸ் மற்றும் போயிங் ஜெட் விமானங்களுக்கான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆர்டரை விட இது பெரிதாக இருக்கிறது. எனவே இந்த ஆர்டர் உறுதி செய்யப்பட்டால் ஒரே விமான நிறுவனத்தால் வழங்கப்பட்ட மிகப் பெரிய ஆர்டர் என்ற பெயரை அமெரிக்கன் ஏர்லைன்ஸிடமிருந்து, ஏர் இந்தியா தட்டி பறிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
ஒரு பெரிய ஃபுல் -சர்விஸ் கேரியரை உருவாக்கி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் தனது இருப்பை வலுப்படுத்த ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைப்பது குறித்த டாடா குரூப்பின் அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு பிறகு இப்போது இந்த மிகப்பெரிய ஆர்டர் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்துடனான ஒப்பந்தம் டாடாவின் தொழிலில் 218 விமானங்களை கூடுதலாக சேர்த்துள்ளது.
இதனை தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க ஆர்டரின் மூலம் ஏர் இந்தியா எளிதாக நாட்டின் மிகப்பெரிய சர்வதேச கேரியராகவும், உள்நாட்டு சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1932-ல் ஜேஆர்டி டாடாவால் நிறுவப்பட்ட ஏர் இந்தியா, கடந்த 1953-ல் தேசியமயமாக்கப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு ஜனவரியில் தனது ஏர் இந்தியாவை பெரும் விலை கொடுத்து தன் வசப்படுத்திய டாடா குரூப், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனம் என்ற நற்பெயரை மீட்டெடுக்க அடுத்தடுத்து பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தவிர பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக விரிவுபடுத்தும் பிரதமர் மோடியின் இலக்குக்கும் ஏர் இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தம் பங்களிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air India, Automobile, TATA